வாகமன் Twitter
இந்தியா

வாகமன் : ட்ரெக்கிங், போட்டிங், அருவி குளியல் - வீக் எண்ட் சுற்றுலாவுக்கு தரமான இடம்

Antony Ajay R

சென்னையிலிருந்து தேனி, குமுளி வழியாகச் சென்றால் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வாகமன் மலையைக் கிட்டத்தட்ட 12 மணி நேரத்தில் அடையலாம். ஆம் கடினமான பயணம் தான் ஆனால் பயணத்தின் விளைவாக நாம் காணும் காட்சி கண்கொள்ளாததாக இருக்கும். இதயத்தை சுத்திகரிக்கும் இயற்கையின் ரசாயனங்கள் ஒளிந்திருக்கும் ஓரிடம் தான் வாகமன்.

பைக், பஸ், கார் எப்படி வேண்டுமானாலும் சென்று விடலாம். வாகமன் மலை முழுவதும் வியூ பாயிண்ட்களால் ஆனது. உச்சியில் நின்று கேரளத்தின் அழகை ரசிக்க ஏற்ற மலை வாகமன். பார்ப்பதற்கு ஒரு டூரிஸ்ட் ஸ்பாட் மூடில் இருக்காது என்றாலும் நிதானமாகச் சுற்றிப்பார்க்க இங்குப் பல இடங்கள் உள்ளன. கார்களில் பயணம் செய்பவர்கள் நல்ல ட்ரைவருடன் வரவேண்டியது அவசியம். அத்துடன் குளிர் அதிகமாக இருப்பதால் சொட்டர் மற்றும் இதர தயாரிப்புகளுடன் செல்ல வேண்டும்.

வாகமனில் உள்ள மொட்டைப் பாறையில் தான் ‘தங்க மீன்கள்’ படத்தில் வரும் ‘ஆனந்த யாழை’ பாடல் படமாக்கப்பட்டது. பையா படத்தில் வரும் அடடா மழைடா பாடலும் வாகமனில் தான் படமாக்கப்பட்டது.

வாகமன்

குரிசு மலை, முருகன் மலை, தங்கல் மலை என மூன்று ஆன்மிகத் தளங்கள் இங்கு இருக்கின்றன. குரிசு மலையில் மிகப் பழைமையான புனித செபாஸ்டியன் தேவாலயம்தான் ஸ்பெஷல். முருகன் மலையில் முருகன் கோவில். 800 ஆண்டுகளுக்கு முன்பு ஆஃப்கானிஸ்தானில் இருந்து வந்த ஹஷ்ரத் ஷேக் ஃபரூதீன் பாபா எனும் முனிவர், இந்த தங்கல் மலையில் தான் ஜீவசமாதி அடைந்ததாகச் சொல்கிறார்கள். முஸ்லிம் திருவிழாக்களின்போது இங்குத் தரப்படும் ‘கஞ்சுசக்கார்’ என்னும் இனிப்பு வகை பிரசாதம் செம ஃபேமஸ்.

சாகசமான ட்ரெக்கிங், சாவகாசமான அருவி குளியல், ஆற்றுக் குளியல் என அனுபவிக்க ஆயிரம் உண்டு வாகமனில். அங்கு இருக்கும் சில முக்கியமான ஸ்பாட்களை இங்குக் காணலாம்.


உளிபூனி வனவிலங்கு சரணாலயம்

இது மிக ரொமான்டிக்கான ஸ்பாட். ஹனிமூன் செல்லும் தம்பதிகள், காதலர்களுக்கு ஏற்ற இடம். ரம்மியமான இந்த இடத்தில் அமைதியான ஒரு போட் சவாரி செய்வது தான் எவ்வளவு இன்பமாக இருக்கும்.

பைன் ஃபாரஸ்ட்

பைன் மரங்களின் வாசம் காற்றில் நிறைந்திருக்க காலாற இந்த மரங்களுக்கு நடுவில் ஒரு வாக் செல்வது மெய் சிலிர்க்க வைக்கும்.

மலைத் தொடர்

குருஸி மலை

மலை உச்சியில் ஒரு தேவாலயம் நம்மை வரவேற்கக் காத்திருக்கும். காடுகளுக்கு நடுவில் மரங்களைத் துணையாகக் கொண்டு அந்த இடத்துக்குச் செல்லும் பயணம் அலாதியானது.

மொட்டைப்பாறை

மரங்கள் ஏதுவுமின்றி மொட்டையாக இருப்பதால் இதை மொட்டைப்பாறை என்கிறார்கள். இது ஒரு முக்கியமான வியூ பாயிண்ட்.

வாகமன் அருவி

இந்த அருவிக்கு 2 கிலோ மீட்டர் மலையில் பயணம் செய்ய வேண்டும். கூட்டமே இல்லாமல் தன்னந்தனியாக அருவிக் குளியலை அனுபவிக்க ஏற்ற இடம் இது.

Meadows

மலைகளைப் புல்வெளிப் பச்சைப் போர்வை போர்த்தியிருக்கும் இந்த இடம் தான் வாகமனின் ஸ்பெஷல். இங்கு தான் அதிக சினிமா ஷூட்டிங் எல்லாம் நடக்கும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?