பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் பகவந்த் மான் திருமணம், இன்று (ஜூலை 7) நடைபெறுகிறது. நெருங்கிய உறவினர்களின் முன்னிலையில் சண்டிகரில் உள்ள இவரது இல்லத்தில் மருத்துவர் குர்ப்ரீத் கௌருடன் மணவாழ்க்கையில் நுழைகிறார் பகவந்த் மான். இவர்களை தவிர்த்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மட்டும் திருமணத்திற்கு வருகை தருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பகவந்த் மான்னுக்கு ஏற்கனவே திருமணமாகி சீரத் (21) என்ற மகளும், தில்ஷன் (17) ஒரு மகனும் உள்ளனர். தனது முதல் மனைவியை 2015ஆம் ஆண்டு பிரிந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆறு வருடங்கள் கழித்து மான் இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார். அமெரிக்காவில் தங்கியிருக்கும் அவரது பிள்ளைகள், கடந்த மார்ச் மாதம் மான் பதவியேற்பு விழாவிற்கு வந்திருந்தனர்.
குர்ப்ரீத் ஹரியானா மாநிலம், குருக்ஷெதிரா நகரின் பெஹோவா என்ற கிராமத்தில் பிறந்தவர். அம்பல நகரிலுள்ள மகரிஷி மார்கண்டேஷ்வர் பல்கலைக்கழகத்தில் தனது மருத்துவ படிப்பை முடித்தார் குர்ப்ரீத். 32 வயதாகும் இவர் தற்போது மொஹாலியில் தங்கி பணியாற்றி வருகிறார். விவசாயியான இவரது தந்தை இந்திரஜீத் சிங் நட் மதன்பூர் கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவராவார்.
மேலும் இவரது உறவினர், குர்ஜீந்தர் சிங் நட் ஆம் ஆத்மி கட்சியில் ஒரு உறுப்பினர். கடந்த இரண்டு வருடங்களாகவே இவர்களது திருமணம் குறித்த பேச்சுக்கள் நடைபெற்று வந்ததாக குர்ஜீந்தர் தெரிவித்தார். பகவந்த் மான்னின் தாயார் மற்றும் சகோதரியின் சம்மதத்துடன், இத்திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
பகவந்த்தின் திருமணத்திற்கு அரசியல் வட்டாரங்களிலிருந்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust