Bilgis Banu case: Court canceled the release of 11 convicts! Vikatan
இந்தியா

பில்கிஸ் பானு வழக்கு: 11 குற்றவாளிகள் விடுதலையை ரத்து செய்த நீதிமன்றம்!

2022ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி தண்டனை குறைப்பு கொள்கையின் கீழ் இந்த 11 பேரையும் விடுதலை செய்தது குஜராத் அரசு. இதற்கு நாடு முழுவதும் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இந்துத்துவவாதிகள் குற்றவாளிகளை சிறையில் இருந்து மாலை அணிவித்து வரவேற்றது சர்ச்சையானது.

Antony Ajay R

2002ம் ஆண்டும் குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பிறகான கலவரத்தின் போது பில்கிஸ் பானு என்ற பெண்மனி 11 பேர் உள்ள கும்பலால் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.

அந்த கும்பல் பில்கிஸ் பானுவின் குழந்தை உட்பட குடும்பத்தினர் 7 பேரைக் கொலை செய்தனர். நீண்ட காலம் நடந்த இந்த வழக்கில் கடந்த 2008ம் ஆண்டு 11 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

2022ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி தண்டனை குறைப்பு கொள்கையின் கீழ் இந்த 11 பேரையும் விடுதலை செய்தது குஜராத் அரசு. இதற்கு நாடு முழுவதும் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இந்துத்துவவாதிகள் குற்றவாளிகளை சிறையில் இருந்து மாலை அணிவித்து வரவேற்றது சர்ச்சையானது.

குஜராத் அரசின் இந்த முடிவை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. அவற்றில் பொதுநல வழக்குகள் விசாரிக்க தகுதியற்றவை என நிராகரித்த நீதிபதிகள், பில்கிஸ் பானுவின் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர்.

அந்த வழக்கு விசாரணையில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், "குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. இந்த வழக்கு மகாராஷ்டிராவில் நடைபெற்றதால், மராட்டிய அரசு தான் 11 பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்க முடியும். எனவே, குற்றவாளிகளை விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்கிறோம். பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் என்பது மிகவும் முக்கியம். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். பெண்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களை மன்னிக்க முடியாது. குற்றவாளிகள் அனைவரும் இரண்டு வாரங்களுக்குள் சிறை அதிகாரிகளிடம் ஆஜராக வேண்டும்" எனத் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?