இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி ஏற்கனவே துபாயில் விலை உயர்ந்த வீடு ஒன்றை வாங்கி இருந்தார். மீண்டும் அங்கு பல நூறு கோடிகள் கொடுத்து இன்னொரு வீட்டை வாங்கியுள்ளார்.
இந்தியாவின் பெரிய தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் நிறுவனங்களின் இன்றைய சந்தை மதிப்பு 84 பில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது.
கடந்தாண்டு, பிரிட்டனில், ஸ்டோக் பார்க் கிளப்பை $79 மில்லியன் டாலர்களுக்கு ரிலையனஸ் வாங்கியதாக தகவல் வெளியானது. மேலும் நியூயார்க்கில் வீடு வாங்குவதற்கு தேடி வருகிறார் என்று ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
துபாயில் இருக்கும் பாம் ஜுமேரா தீவில் தான் நடப்பாண்டின் தொடக்கத்தில் வீடு வாங்கியதாக தகவல் வெளியாகி இருந்தது. அந்த வீடு தனது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த வீடு 10 படுக்கையறைகள், ஒரு தனியார் ஸ்பா, உட்புற, வெளிப்புற நீச்சல் குளங்கள் கொண்டது என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் முகேஷ் அம்பானி, துபாயின் பாம் ஜுமேரா தீவில் $163 மில்லியன் (மதிப்பிடப்பட்ட ரூபாய் 1,349.60 கோடி) விலையில் மீண்டும் ஒரு ஆடம்பரமான மாளிகையை வாங்கியுள்ளார்.
ஸ்டார்பக்ஸ், எச்&எம் மற்றும் விக்டோரியாஸ் சீக்ரெட் போன்ற சில்லறை வர்த்தகப் பிராண்டுகளுக்கான உள்ளூர் உரிமையாளர்களைக் கொண்ட குவைத் அதிபர் முகமது அல்ஷாயாவின் குடும்பத்திடமிருந்து அம்பானி கடந்த வாரம் இந்த மாளிகையை வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust