BJP : தெரிந்த கட்சி தெரியாத உண்மைகள்! Newssense
இந்தியா

BJP: தெரிந்த கட்சி தெரியாத உண்மைகள்!

Antony Ajay R

இந்தியாவை கடந்த 2014ம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வரும் பாஜக கட்சித் தொடங்கி இன்றுடன் 43 ஆண்டுகள் நிறைவடைகிறது.

பாஜக உருவானது எப்படி?

ஏப்ரல் 6, 1980ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி உருவானதாக கூறப்படுகிறது. ஜனசங்கம் கட்சியிலிருந்து இது தோன்றியது.

1925ம் ஆண்டு உருவான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தங்களையே பாஜக அடிப்படையாக கொண்டது.

ஆர்.எஸ்.எஸ் ஆலோசனையுடன் சியாமா பிரசாத் முகர்ஜியால் 1951ம் ஆண்டு உருவாக்கப்பட்டது தான் ஜன சங்கம்.

1977வரை செயல்பட்ட இந்த கட்சி ஜனதா கட்சியுடன் இணைந்தது. பின்னர் 1980ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியாக உருவெடுத்தது.

2 எம்.பிக்கள் முதல் 303 எம்.பிக்கள்

பாஜகவின் முதல் தலைவராக அடல் பிகாரி வாஜ்பாய் இருந்தார்.

1984ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட பாஜக சார்பில் ஆந்திராவைச் சேர்ந்த சந்துபத்ல ஜங்கா ரெட்டி மற்றும் குஜராத்தில் இருந்து ஏ.கே படேல் ஆகிய இருவர் மட்டுமே நாடாளுமன்ற உருப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இப்போது பாஜகவுக்கு 303 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

43 ஆண்டுகளில் உலகின் மிகப் பெரிய அரசியல் கட்சியாக மிகப் பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது பாஜக.

பிஜேபி vs காங்கிரஸ்

1984 தேர்தலில் 7.7 விழுக்காடு மக்களின் வாக்குகளை மட்டுமே வைத்திருந்த பாஜக 2019ம் ஆண்டு 37.49 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது.

அதாவது இந்திய வாக்காளர்களில் 3ல் ஒரு பங்கு பாஜகவுக்கு வாக்களிக்கத் தொடங்கிவிட்டனர்.

பாஜக வளர வளர அதன் எதிர்கட்சியான காங்கிரஸ் செங்குத்தாக வீழ்ந்தது. 1984ல் 415 நாடாளுமன்ற தொகுதிகளை வென்ற காங்கிரஸ் 2019 நாடாளுமன்ற தேர்தலில் 44 தொகுதிகளையே கைப்பற்றியது.

19ம் நூற்றாண்டிலேயே தொடங்கப்பட்ட சுதந்திர இந்தியாவை 70 விழுக்காடு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி பாதாளத்துக்கு சரிந்தது.

மாநிலங்களில் ஆட்சி

பாஜக தனிக்கட்சியாக முதல் முறை ஆட்சியமைத்தது 1990ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் தான். பைரோன் சிங் ஷெகாவாத் மாநில முதல்வராக பொறுப்பேற்றார்.

இப்போது நாட்டில் உள்ள 15 மாநிலங்களை பாஜக ஆளுகின்றது அல்லது மாநிலங்களில் ஆளும் கட்சியின் கூட்டணியாக இருக்கிறது.

இதே நேரத்தில் காங்கிரஸ் ஒரு மாநிலத்தைக் கூட சொந்தமாக ஆட்சி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத், மத்திய பிரதேசம் மாநிலங்களில் முறையே 25 மற்றும் 20 ஆண்டுகாலம் தொடர்ந்து ஆட்சியைத் தக்கவைத்துள்ளது பாஜக.

பாஜகவின் பிரதமர்கள் (வாஜ்பாய், மோடி)

பாஜக சார்பில் முதல்முறையாக பிரதமரானவர் அடல் பிகாரி வாஜ்பாய் தான். அவரால் பெரும்பாண்மையை நிரூபிக்க முடியாமல் போனதால் 13 நாட்களில் பதவியை இழந்தார்.

1998ம் ஆண்டு அடுத்த தேர்தலில் போட்டியிட்டு வென்ற வாஜ்பாய், 2004ம் ஆண்டு வரை பதவியில் இருந்தார்.

ஒரு தசாப்தத்துக்கு பிறகு பிரதமராக வெற்றிபெற்ற நரேந்திர மோடி, முதல் முறையாக இரண்டு தேர்தல்களை தொடர்ச்சியாக வென்று கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்திருக்கிறார்.

18 கோடிக்கும் மேல் உறுப்பினர்களைக் கொண்ட உலகின் மிகப் பெரிய கட்சியாக பாஜகவை உருவாக்கியிருக்கிறார் மோடி என்றால் அது மிகையாகாது.

பல சர்ச்சைகுரிய சட்டங்கள், வன்முறை நிகழ்வுகள், கலவரங்கள், மாநில கட்சிகளுடனான மோதல்கள், கருத்து சுதந்திரத்துக்கு எதிரான போக்குகளையும் கடந்து மக்கள் மத்தியில் வளர்ந்துகொண்டிருக்கிறது பாஜக.

என்றபோதிலும் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக-வால் கால்தடம் பதிக்க முடியவில்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?