Modi-UAE President Twitter
இந்தியா

முகமது நபிகள் குறித்து பாஜக நிர்வாகிகள் சர்ச்சை கருத்து - இதுவரை நடந்தது என்ன?

NewsSense Editorial Team

சமீபத்தில் இந்தியாவை ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் மற்றும் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் இஸ்லாமிய மதத்தின் இறைத்தூதராகக் கருதப்படும் முகமது நபிகளை குறித்து சில தவறான கருத்துக்களைக் கூறினர்.

Nupur Sharma

கத்தார், குவைத், இரான் உட்பட பல அரபு நாடுகள் அக்கருத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளன. சொல்லப்போனால் அரபு உலகம் ஒன்றுகூடி இந்தியாவுக்கு எதிராக தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளது எனலாம்.


கடந்த வாரம் பல்வேறு மத ரீதியிலான பிரிவினைவாத நிகழ்வுகளை தொடர்ந்து நுபுர் சர்மா என்கிற பாஜகவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், இறைத்தூதர் முகமது நபிகள் குறித்து சில தவறான கருத்துக்களை கூறினார். அது இந்திய இஸ்லாமியர்களை கடந்து உலகில் உள்ள பல்வேறு இஸ்லாமிய நாடுகளையும் கோபப்பட செய்தது.

Nupur Sharma

நுபுர் சர்மாவின் கருத்துக்களை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நவீன்குமார் ஜிண்டால் தன் ட்விட்டர் பக்கத்தில் இறைத்தூதர் முகமது நபிகள் குறித்து சில தவறான கருத்துக்களைப் பதிவிட்டார். இது உலகம் முழுக்க உள்ள பல்வேறு இஸ்லாமிய நாடுகள் மற்றும் அதன் ஆட்சியாளர்களை அதிருப்தி கொள்ளச் செய்தது. பல்வேறு அழுத்தங்களுக்குப் பிறகு நவீன்குமார் ஜிண்டால் நபிகள் குறித்த ட்வீட்டை நீக்கினார்.


ஆனால் அதற்குள் இந்தியாவை ராஜரீக ரீதியில் அழைத்து கண்டிப்பது மற்றும் இந்திய பொருட்களை புறக்கணிப்புக்கு அரபு உலகம் அழைப்பு விடுப்பது வரை பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து நுபுர் சர்மா கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாகவும் நவீன்குமார் ஜிண்டால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் பாரதிய ஜனதா கட்சி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

நேற்று (ஜூன் 5, ஞாயிற்றுக்கிழமை) கத்தாரின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அந்நாட்டுக்கான இந்திய தூதர் தீபக் மித்தலை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.


அதில் முகமது நபிகளை குறித்து தவறான கருத்துக்களைக் கூறியவர்களைப் பாரதிய ஜனதா கட்சி வெளியேற்றிய நடவடிக்கைகளை தாங்கள் வரவேற்பதாகவும், இக்கருத்துக்குப் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் உடனடியாக கருத்துகளை இந்திய அரசு கண்டிக்க வேண்டும் என்றும் கத்தார் எதிர்பார்ப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


கத்தார் நாட்டுக்கான இந்திய தூதர், பாஜக நிர்வாகிகளின் கருத்துக்கள், எந்த விதத்திலும் இந்திய அரசின் கருத்தை பிரதிபலிக்காது என விளக்கியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Nupur Sharma

இந்தப் பேச்சுவார்த்தைகள் எல்லாம் ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க ஜூன் 5ஆம் தேதி கத்தார் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம், பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கூறிய கருத்தை முழுமையாக நிராகரிப்பதாகவும், கண்டிப்பதாகவும் அதுகுறித்த கத்தார் நாட்டு அரசின் குறிப்பை கத்தார் நாட்டுக்கான இந்திய தூதரிடம் கொடுத்திருப்பதாகவும் தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிட்டது கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சகம்.


இந்தியா 75ஆவது சுதந்திர ஆண்டை கொண்டாடி வரும் நேரத்தில், இந்தியாவில் உள்ள அனைவரும் சமம், அனைவரும் மரியாதையோடு வாழ வேண்டும் என்கிற நோக்கில் இந்தியாவை வளர்த்தெடுக்க உறுதி கொண்டு உள்ளது இந்திய அரசு.

இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைந்த பண்பில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்தியாவில் உள்ள அனைவரும் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டின் பலன்களை அனுபவிக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறோம் என இந்திய ஒன்றிய அரசு வெளியிட்ட செய்தி அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இக்கருத்தை பல்வேறு எதிர்க்கட்சியினரும் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளனர். மேலும் பாரதிய ஜனதா கட்சியின் மதவாத மற்றும் பிரிவினைவாத அரசியல் காய்நகர்த்தல்களையும் குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?