"கொரோனா காலத்தில் 40,000 கோடி ஊழல்" - பாஜக MLA வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு! Twitter
இந்தியா

"கொரோனா காலத்தில் 40,000 கோடி ஊழல்" - பாஜக MLA வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு!

Antony Ajay R

கர்நாடகா பாஜகவைச் சேர்ந்த பசன் கௌடா, கொரோனா நெருக்கடி காலத்தில் பாஜக முதல்வர் எடியூரப்பா ஆட்சியில் 40,000 கோடி ஊழல் நடந்ததாக கூறியுள்ளார். மேலும் தன்னை கட்சியில் இருந்து நீக்கினால் பெயர்களை வெளியுடுவேன் என்றும் எச்சரித்துள்ளார்.

விஜய்பூர் எம்.எல்.ஏவான பசனகௌடா பாட்டீல் யட்னல், "ஒவ்வொரு கொரோனா நோயாளிக்கும் 8 முதல் 10 லட்சம் பில் போட்டுள்ளனர். அது எங்கள் கட்சி ஆட்சி என்றெல்லாம் இல்லை, திருடர்கள் எந்த கட்சியில் இருந்தாலும் திருடர்களே" எனப் பேசியுள்ளார்.

மேலும் கொரோனா காலத்தில் 45 மாஸ்குக்கு 485 ரூபாய் பில் போட்டதாகவும் அரசை குற்றம்சாட்டியுள்ளார் பசனகௌடா.

எதிர்கட்சித் தலைவராக இருக்கும் சித்தராமையா, "பசனகௌடாவின் கருத்துகள் நாங்கள் வைத்த 40% கமிஷன் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக அமைந்துள்ளது. அவர் கூறுவதை கருத்தில்கொள்ளும்போது பாஜகவின் ஊழல் நாங்கள் நினைத்ததை விட 10 மடங்கு அதிகம்.

நாங்கள் குற்றச்சாட்டு முன்வைத்தபோது அலறிக்கொண்டு செய்தியாளர் சந்திப்பு நடத்திய பாஜக அமைச்சர்கள் குழு இப்போது எங்கு ஒளிந்துள்ளது?" எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?