Broken Glass
Representational Image
பிரிட்டனைச் சோ்ந்த விமானம் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது அதன் கண்ணாடி உடைந்த செய்தி சர்வதேச அளவில் பல நாளிதழ்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
இந்த சம்பவத்தில் விமானப் பயணிகள் 200 போ் உயிா் தப்பினர் என்கிறது அவ்வூடக செய்திகள்.
பிரிட்டன் தலைநகா் லண்டனிலிருந்து பயணிகள் விமானம் ஒன்று கோஸ்டாரிகா நாட்டில் உள்ள சான் ஜோஸ் நகருக்கு கிறிஸ்துமஸ் தினத்தில் சென்று கொண்டிருந்தது. 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, அந்த விமானத்துக்கு மேலாக 1000 அடி உயரத்தில் பறந்த மற்றொரு விமானத்திலிருந்து பிரிட்டன் விமானத்தின் முன்புற கண்ணாடியில் பனிக்கட்டி குவியல் விழுந்தது. இதில், இரு அங்குல தடிமன் கொண்ட கண்ணாடியில் பலத்த விரிசல் விழுந்தது. இந்த சம்பவத்தில் பயணிகள் காயமின்றி தப்பினா்.
உதயநிதி
உதயநிதிக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கண்டனம்!
கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், எம்எல்ஏவுமான அம்மன் கே.அர்ச்சுணன் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த சட்டப் பேரவை தேர்தலில், திமுகவுக்கு கோவை மாவட்ட மக்கள் வாக்களிக்க வில்லை என்பதால் அவர்களை குசும்புக்காரர்கள் என்று கொச்சைப் படுத்தி பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Booster Vaccine
'இணை நோய் உள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி போடுவதற்கு மருத்துவரின் ஒப்புதல் சான்றிதழை காட்ட வேண்டியதில்லை' என மத்திய அரசு தெரிவித்துள்ள செய்தி பெரும்பாலான இந்திய நாளிதழ்களில் பிரதான இடத்தை பிடித்துள்ளன.
இணை நோய்கள் இருப்பவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு விரும்பினால், அதற்கென சான்றிதழ் பெற்று வர வேண்டுமென அரசின் முந்தைய அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. அதுவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ள பட்டியலில் உள்ள நோய்களுக்கு சிகிச்சை பெறுவோர் மட்டுமே தகுதியுள்ளவர்களாக கருதப்படுவர் என்றும், இவர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் தகுதி வாய்ந்த மருத்துவர் அளிக்கும் சான்றிதழ் கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கு மருத்துவரின் ஒப்புதலை காட்ட வேண்டியது அவசியமில்லை என்ற புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நீட் விலக்கு தொடர்பாக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதா பரீசிலனையில் உள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவால் கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு ஆளுநரின் செயலாளர் இவ்வாறாக தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தி
நாட்டை பிளவு படுத்தும் வெறுப்பு மற்றும் பிரிவினை சிந்தாந்தவாதிகளுக்கு சுதந்திர போராட்டத்தில் எந்த பங்கும் இல்லை. தற்போது அந்த சிந்தாந்தம் நமது சமூகத்தின் மதசார்பற்ற கட்டமைப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது இதற்கு எதிராக காங்கிரஸ் சண்டை செய்யும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்டதன் 137வது ஆண்டு கொண்டாட்டம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சோனியாகாந்தி இவ்வாறாக தெரிவித்துள்ளார்.