பட்ஜெட் 2024: ” நாட்டில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது” - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை Twitter
இந்தியா

பட்ஜெட் 2024: தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 6% ஆக குறைப்பு - நிதியமைச்சர் நிர்மலா

Priyadharshini R

பட்ஜெட் உரையை பெற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு ஊட்டினார்

2024 பட்ஜெட் தாக்கல் - நாடாளுமன்ற வளாகத்துக்கு வருகை தந்தார் பிரதமர் மோடி!

2024-25 பட்ஜெட் நகலை குடியரசு தலைவர் திரெளபதி முர்முவிடம் கொடுத்து ஒப்புதலை பெற்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

2024-25 ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

விலைவாசி கட்டுக்குள் உள்ளது

நாட்டில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது. மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் மீதான மக்களின் நம்பிக்கைதான் 3வது தேர்தல் வெற்றி - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

2024 பட்ஜெட்டில், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

'பிஎம் கரீப் அன்ன யோஜனா' திட்டம்

80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் 'பிஎம் கரீப் அன்ன யோஜனா' திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்

அடுத்த 5 ஆண்டுகளில், 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடுக்காக ₹2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படவுள்ளது

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மின்னுகிறது -நிதியமைச்சர்

வேளாண் மற்றும் அதுசார்ந்த துறைகளுக்கு ₹1.52 லட்சம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு

“அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள்”

2024 பட்ஜெட் - அதிக கவனம் செலுத்தப்பட உள்ளவை

விவசாயத்தில் உற்பத்தித்திறன் மற்றும் பின்னடைவு; வேலைவாய்ப்பு மற்றும் திறன்

மேம்பட்ட மனித வளம், சமூக நீதி

உற்பத்தி மற்றும் சேவைகள்

நகர்ப்புற வளர்ச்சி

ஆற்றல் பாதுகாப்பு

உள்கட்டமைப்பு

புதுமை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு

அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள்

உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்விக்காக ₹10 லட்சம் வரை கடனுக்கான நிதியுதவியை அரசு வழங்கும்

பணிபுரியும் பெண்களுக்காக சிறப்பு தங்கும் விடுதி - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

பட்ஜெட்டில் பீகார், ஆந்திராவுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிப்பு

வரி குறைப்பு மூலம் ஊழியர்கள் ஆண்டுக்கு ₹17,500 சேமிக்க முடியும்

சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, தாம்பரம் - செங்கல்பட்டு விரைவுச் சாலை திட்ட ஒப்புதல், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை

வருமான வரி தாக்கல் செய்வதில் கால தாமதம் ஆவது குற்றம் அல்ல

தொழில் முதலீட்டாளர்களுக்கான ஏஞ்சல் வரி ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு - நிதியமைச்சர்

நீண்ட கால மூலதன ஆதாய வரி (Long-term capital gains tax) 10%-ல் இருந்து 12.5% ஆக அதிகரிப்பு

செல்போனுக்கான சுங்கவரி 15 % ஆக குறைப்பு!

பிளாட்டினம் மீதான சுங்கவரி 15.4%-ல் இருந்து 6.5%ஆக குறைப்பு! -நிர்மலா சீதாராமன், நிதியமைச்சர்

தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 6% ஆக குறைப்பு

புற்றுநோய் தொடர்பான 3 மருந்துகளுக்கு சுங்க வரி ரத்து!

வெண்வெளி சார்ந்த திட்டங்களுக்கு ₹1000 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு

5 ஆண்டுகளுக்கு, நகர்ப்புற வீட்டு வசதி மேம்பாட்டுத் திட்டத்துக்கு ₹2.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

மாநில அரசுகள் பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க வேண்டும் என பட்ஜெட்டில் வலியுறுத்தல்

சிறு, குறு தொழில் (MSME) நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பட்ஜெட்டில் ₹100 கோடி நிதி ஒதுக்கீடு

மகளிர் நலன் சார்ந்த திட்டங்களுக்கு ₹3 லட்சம் கோடி ஒதுக்கீடு

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?