Cheapest International Destinations from India Twitter
இந்தியா

இந்தியாவிலிருந்து குறைந்த விலையில் செல்லக்கூடிய வெளிநாட்டு இடங்கள் பற்றி தெரியுமா?

குறைந்த செலவிலேயே வெளிநாட்டிற்கு ட்ரிப் சென்று வரலாம் என்றால் எப்படி இருக்கும்.. இந்த கேள்வியை பயண பிரியர்களிடம் கேட்டால் அவர்கள் சொல்வார்கள், உணர்வுபூர்வமான பதிலை!

Priyadharshini R

வெக்கேஷனுக்கு உள்ளூர் நாட்டிற்கு செல்வதை விட வெளிநாட்டுக்கு செல்ல பலர் விருப்பப்படுவார்கள். குடும்பத்துடனோ அல்லது நண்பர்களாகவோ உலகின் பல இடங்களை சுற்றி பார்க்க நினைப்பார்கள். ஆனால் முதலில் நம் நினைவிற்கு வருவது இந்த பயண செலவுகள் தான்.

குறைந்த செலவிலேயே வெளிநாட்டிற்கு ட்ரிப் சென்று வரலாம் என்றால் எப்படி இருக்கும்...இந்த கேள்வியை பயண பிரியர்களிடம் கேட்டால் அவர்கள் சொல்வார்கள், உணர்வுப்பூர்வமான பதிலை!

இந்தியாவில் இருந்து குறைந்த விலையில் செல்லக்கூடிய வெளிநாட்டு இடங்களைப் பற்றி இங்கு பட்டியலிட்டிருக்கோம்.

நேபாளம்

தோராயமான செலவு - 7 நாள் பயணத்திற்கு ஒரு தனிநபருக்கு ரூ. 38,000 முதல் ரூ.45,000 வரை செலவாகும்.

இமயமலையின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் நேபாளம் கோவில்கள், மடங்கள் என இயற்கை எழில் கொஞ்சும் அழகு நிறைந்த ஒரு அழகிய நாடு.

இந்தியாவில் இருந்து குறைந்த விலையில் செல்லக்கூடிய பல சர்வதேச இடங்கள் இருந்தாலும், சாகச விளையாட்டுகளுக்கு நேபாளம் சிறந்த இடமாகும்.

பொதுவாக, நேபாளத்திற்குச் செல்லும் பயணிகளுக்கான உணவு மற்றும் தங்குமிடச் செலவு ஒரு நாளைக்கு சுமார் ரூ.3,000 ஆகும். செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டைக் கொண்ட இந்திய குடிமக்கள் நேபாளத்திற்குச் செல்ல விசா எதுவும் பெற வேண்டியதில்லை.

விமானச் செலவு: சராசரியாக, டெல்லியில் இருந்து நேபாளத்தின் காத்மண்டுவுக்கு ஒரு நபருக்கு சுற்றுப் பயணக் கட்டணம் ரூ. 12,800.

பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்

  • போகாராவில் பஞ்சி ஜம்பிங்

  • பசுபதிநாதர் கோவில்

  • சாகர்மாதா தேசிய பூங்கா

  • பதான் பழமையான நகரம்

  • போட் கோஷியில் ராஃப்டிங்

வியட்நாம்

தோராயமான செலவு - 7 நாள் பயணத்திற்கு ஒரு நபருக்கு ரூ.45,000 முதல் ரூ.50,000 வரை செலவாகும்.

இந்தியாவில் இருந்து பயணம் செய்ய மலிவான நாடுகளில் வியட்நாமும் ஒன்று. எந்தவொரு பயணியும் குறைவான விலையில் ஆடம்பரமான உணவை உண்ணலாம். உணவு மற்றும் தங்குமிடச் செலவு ஒரு நாளைக்கு சுமார் ரூ.3,200 ஆகும்.

இது தவிர விசா செலவுகள் இருக்கும். டெல்லியிலிருந்து வியட்நாமின் ஹனோய்க்கு ஒரு சுற்றுப் பயணத்திற்கான விமானக் கட்டணம் ரூ. 9,240 முதல் ரூ. 15,026 வரை ஆகும்.

பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்

  • கான் தாவோ தீவுகள்

  • என் கே கடற்கரை

  • ஹனோயில் உள்ள இலக்கிய கோவில்.

  • காவ் டாய் கோவில்

பூட்டான்

தோராயமான செலவு - 7 நாள் பயணத்திற்கு ஒரு நபருக்கு ரூ.14,000 முதல் ரூ.25,000 வரை செலவாகும்.

இந்தியாவிலிருந்து வரும் மலிவான இடங்களுள், பூட்டான் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும், குறிப்பாக சாகசப் பயணங்களுக்கு.

இமயமலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நாட்டில் உள்ள தங்கும் விடுதிகள் ஒரு நபருக்கு ரூ.2,200 வரை ஆகும். உணவு செலவு ரூ.100 முதல் ரூ.400 வரை இருக்கும்.

விசா மற்றும் விசா கட்டணம்: விசா தேவையில்லை.

விமானச் செலவு: டெல்லியிலிருந்து பூட்டானின் பரோவுக்குச் செல்ல ரூ. 11,700 ஆகும்.

பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்

  • டோச்சுலா பாஸ்

  • திம்பு

  • ஃபூன்ஷோலிங்.

  • ஜோமோல்ஹரி மலையில் மலையேற்றம்

  • பம்டெலிங் வனவிலங்கு சரணாலயம்

இலங்கை

தோராயமான செலவு - 7 நாள் பயணத்திற்கு ஒரு நபருக்கு ரூ.27,000 முதல் ரூ.29,000 ஆகும்.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கை, அதன் பார்வையாளர்களுக்கு சூரிய ஒளியில் படர்ந்த கடற்கரைகளை வழங்குகிறது.

உணவு மற்றும் தங்குமிடம்: உணவு செலவுகள் சுமார் ரூ. 400, தங்குவதற்கு ஒரு இரவுக்கு ரூ.1,000க்குள் வைத்திருக்கலாம்.

விசா செலவு : ரூ. 1,648 (தோராயமாக)

விமானச் செலவு: டெல்லியிலிருந்து இலங்கையின் கொழும்புக்கு ஒரு சுற்றுப் பயணக் கட்டணம் சுமார் ரூ.14,000 முதல் ரூ.15,000 வரை ஆகும்.

தாய்லாந்து

தோராயமான செலவு - 7 நாள் பயணத்திற்கு ஒரு தனிநபருக்கு ரூ.45,000 முதல் ரூ.49,000 வரை செலவாகும்.

அரச அரண்மனை முதல் நவீன நகரங்கள் வரை, தாய்லாந்து தனது பார்வையாளர்களுக்கு அனைத்து வகையான அனுபவங்களையும் வழங்குகிறது.

உணவு மற்றும் தங்குமிடம்: தங்குமிடச் செலவுகள் பொதுவாக ரூ.1,600 முதல் தொடங்கும், தேவைக்கேற்ப அதிகரிக்கலாம். ஒரு நாள் சாப்பாடு ரூ.1,000 வரை ஆகும்

விமானச் செலவு: டெல்லியில் இருந்து தாய்லாந்தின் பாங்காக்கிற்கு சராசரி விமானக் கட்டணம் ரூ.11,000 முதல் ரூ.13,000 வரை இருக்கும்.

முக்கிய இடங்கள்

  • ரெய்லே கடற்கரை

  • கோ ஃபை ஃபை

  • கிராண்ட் பேலஸ், பாங்காக்

  • சண்டே வாக்கிங் ஸ்ட்ரீட், சியாங் மாய்

மலேசியா

தோராயமான செலவு - 7 நாள் பயணத்திற்கு ஒரு தனிநபருக்கு ரூ.38,000 வரை செலவாகும்.

இந்தியாவில் இருந்து செல்லக்கூடிய மலிவான இடங்களில் ஒன்றான, மலேசியா கடல் நிறைந்த ஒரு இனிமையான காலநிலையை வழங்குகிறது.

கடல் மட்டுமன்றி வனவிலங்குகள் மற்றும் பசுமை உட்பட பல அழகிய இடங்களை நாடு பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. இது ஒரு வளமான கலாச்சார மற்றும் மத பாரம்பரியத்தையும் கொண்டுள்ளது.

உணவு மற்றும் தங்குமிடம்: ஒரு நாள் முழுவதும் உணவிற்கான செலவு ரூ.850 முதல் ரூ.1,200 வரை இருக்கும். தங்குமிட செலவு ஒரு இரவுக்கு ரூ.800 முதல் ரூ.1000 வரை இருக்கலாம்.

விமானச் செலவு: டெல்லியிலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்குச் செல்ல உங்களுக்கு ரூ.15,000 முதல் ரூ.19,000 வரை செலவாகும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?