Forbes
Forbes Twitter
இந்தியா

ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்ற மகன்- வைரலாகும் தந்தையின் ரியாக்ஷன்

Keerthanaa R

பரீட்சையில் 98 மார்க் எடுத்தால், இரண்டு மார்க் என்னாச்சு என்ற கேள்வியில் தொடங்கி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில், வாசிங்டன் சுந்தரின் சென்சுரி மிஸ் ஆனது வரை, நம் நாட்டில் அப்பாக்களை திருப்திப்படுத்துவது இன்றும் மிகக் கடினமாகவே இருக்கிறது.


பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் 'அண்டர் 30' பட்டியலில், ஹரீஷ் உதயகுமார் என்கிற இளைஞரின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதை தொடர்ந்து, ஹரீஷ் தன் தந்தைக்கு அந்த செய்தியை வாட்சப்பில் பகிர, அதற்கு அவரது தந்தை கொடுத்த பதில், பலரின் இதே அனுபவங்களை கிளரிவிட்டுள்ளது.

Dad's keyboard

மதிய உணவை முடித்துவிட்டாயா என்று கேட்ட தந்தையிடம், இன்னும் இல்லை, பை தி வே இதை பாருங்கள் என்று, ஃபோர்ப்ஸின் செய்தியை ஸ்க்ரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்துள்ளார். இதற்கு ஹரீஷின் தந்தை அளித்த பதில் இரண்டு தம்ஸ் அப் ஈமோஜி!

சாப்பிடவில்லை என்று சொன்னதற்கா இல்லை, ஃபோர்ப்ஸின் செய்திக்கா என்று தெரியவில்லை, ஆனால் இதை பார்த்த அனைவரும் கூறிவருவது, அப்பாக்களை திருப்திப்படுத்துவது எப்போதும் கடினம் தான் என்று.

இந்த உரையாடலை ட்விட்டரில் " Drop some 👍 in the chat" என்று பகிர்ந்த ஹரிஷுக்கு வாழ்த்துகள் ஒரு பக்கம் குவிய, இன்னொரு பக்கம் தந்தையின் ரியாக்ஷனுக்கு லைக்குகள் குவிகிறது.

ஒரு ட்விட்டர் பயனாளர், "உங்களை சந்திக்கும் முன், உங்கள் தந்தையை நான் சந்திக்கவேண்டும்" என்று கமண்ட் செய்திருந்தார். இன்னொருவர், "ஃபோர்ப்ஸை விடு, சீக்கிரம் அரசாங்க உத்தியோகம் தேடிப்பிடி" என்று கமண்ட் செய்திருந்தார்.

இந்த டிப்பிகல் அப்பாவின் ரியாக்ஷன் இணையத்தைக் கலக்கி வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகள் இவைதான்!

அமெரிக்காவில் இன்றும் கழுதைகள் மூலம் அஞ்சல் அனுப்பப்படுகிறதா! ஏன் இந்த நடைமுறை?

மெசேஜிங் செயலி விற்று கோடீஸ்வரரான இளைஞர் - எப்படி தெரியுமா?