newborn baby Twitter
இந்தியா

புதைகுழியில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட பெண் குழந்தை - பின்னணி என்ன?

Priyadharshini R

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் உள்ள பங்கூத் கிராமத்தில் வசிப்பவர்கள் பஷாரத் அகமது குஜ்ஜார் மற்றும் ஷமீமா பேகம் தம்பதி. நிறை மாத கர்ப்பிணியான ஷமீமாவுக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது அவருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

எனினும் அந்த குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 மணிநேரம் காத்திருந்து, பின் மருத்துவமனையில் இருந்து குழந்தையை எடுத்துக் கொண்டு ஹல்லான் கிராமத்திற்குச் சென்று இறுதிச் சடங்குகளைச் செய்து குழந்தையைப் புதைத்துள்ளனர்.

newborn baby

ஆனால் அவர்களின் பூர்வீக பகுதியில் தான் குழந்தை புதைக்கப்பட வேண்டும் என்று உள்ளூர் வாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் மனமுடைந்த குடும்பத்தினர், ஒரு மணிநேரம் கழித்து, புதைத்திருந்த குழந்தையை வெளியே எடுத்துள்ளனர். அங்கு ஆச்சரியப்படும் வகையில் அந்த பெண் குழந்தை உயிருடன் இருந்துள்ளது.

இதனை தொடர்ந்து உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று நிர்வாகத்திற்கு எதிராக குடும்பத்தினரும் மற்றவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 மணிநேரம் காத்திருந்தும் மருத்துவமனையின் அலட்சியத்தினால் உயிருடன் இருந்த குழந்தையை இறந்துவிட்டதாகத் தெரிவித்த மருத்துவமனை பணியாளர்கள் 2 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

உள்ளூர் வாசிகள் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால் உயிருடன் இருந்த குழந்தையின் நிலை? இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?