Password  Canva
இந்தியா

Password தான் Password; இந்தியர்கள் பயன்படுத்தும் 10 பாஸ்வேர்ட்கள் இவை தான்- ஆய்வில் தகவல்

இது நம் தகவல்கள் எளிதில் திருடப்படாமல் இருக்கவேண்டும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை. எண்கள், எழுத்துகள், குறியீடுகள் என கலவையான சொற்களை வைத்தால் தான் இந்த கடவுச்சொற்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

Keerthanaa R

மிகவும் பலவீனமான கடவுச்சொற்களை தான் இந்தியர்கள் அதிகமாக பயன்படுத்தி வருவதாக NordPassன் சமீபத்திய அறிக்கை ஒரு கூறியுள்ளது.

கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல் ஃபோன், ஸ்மார்ட் வாட்ச்களுக்கு பாஸ்வேர்ட் வைத்துக்கொள்ளும் அம்சங்கள் உள்ளன. இவற்றை தவிர நாம் பயன்படுத்தும் செயலிகளுக்கு கூட தற்போதெல்லாம் கணக்கு ஒன்று ஆரம்பித்து பாஸ்வேர்ட் வைத்துகொள்ளலாம். நம் பாதுகாப்பு காரணங்கள் கருதி, கடவுசொற்கள் பயன்படுத்தும் தேவையும் இருக்கத்தான் செய்கிறது.

நாம் எப்போதும் ஒரு கருவிக்கு பாஸ்வேர்ட் அமைக்கும்போது, நம்மிடம் பலமான பாஸ்வேர்ட் வைக்கசொல்லி செயலிகள் நம்மை எச்சரிக்கும். இது நம் தகவல்கள் எளிதில் திருடப்படாமல் இருக்கவேண்டும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை. எண்கள், எழுத்துகள், குறியீடுகள் என கலவையான சொற்களை வைத்தால் தான் இந்த கடவுச்சொற்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

இந்நிலையில், NordPass நடத்திய ஆய்வு ஒன்றில் இந்தியர்கள் பெரும்பாலும் மிகவும் பலவீனமான, எளிதில் கண்டுபிடிக்கக் கூடிய பாஸ்வெர்டை தான் பயன்படுத்துகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. NordPass என்பது ஒரு தனியுரிமை பாஸ்வேர்ட் நிர்வாகியாகும். இது 2019ல் தொடங்கப்பட்டது.

இதன் அறிக்கையில், மக்கள் தங்களால் நினைவில் வைத்துக்கொள்ளும்படியான பாஸ்வேர்ட் வேண்டும் என்ற காரணத்தினால், அதிகமாக ஒரே வார்த்தையை அல்லது ஒரே மாதிரியான வார்த்தையை தேர்வு செய்வதாக கூறப்பட்டுள்ளது.

நம் பிறந்த நாள், முக்கிய நிகழ்வுகளின் தேதி, அல்லது பிடித்தவர்களின் பெயர்கள் போன்றவை, அல்லது பெரும்பாலும் ’Password’, 123456, அல்லது 12345678 என்ற வரிசைகளில் தான் கடவுச்சொற்கள் இருக்கின்றன.

இந்தியாவில் மொத்தம் 34.9 லட்சம் பேர் ’Password’ என்ற வார்த்தையை பாஸ்வெர்டாக வைத்துள்ளனர். இதை தவிர அதிக பயன்பாட்டில் இருப்பது இந்த 123456, அல்லது 12345678 போன்ற எண்கள்.

இதை தவிர 75000த்துக்கும் மேற்பட்டோர் ‘bigbasket’ என்ற வார்த்தையை தேர்ந்தெடுத்துள்ளனர். பிற பிரபலமான பாஸ்வேர்டுகள் 12345678, 123456789, pass@123, anmol123, abcd1234, googledummy, Indya123.

இந்த கடவுச்சொற்களை எவ்வளவு நேரத்தில் கண்டுபிடிக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. password, 123456, 12345678, 123456789 போன்றவற்றை ஹாக் செய்ய ஒரு வினாடிக்கும் குறைவான நேரமே தேவைப்படுகிறது. இதில் அதிகபட்சமாக googledummy, என்ற வார்த்தையை ஹாக் செய்ய தான் 23 நிமிடங்கள் ஆகிறது.

இந்தியாவில் மட்டுமல்லாது, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளிலும் இதுபோன்ற கணிக்கக்கூடிய வார்த்தைகள் தான் பயன்பாட்டில் உள்ளது என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. சைபர் கிரைம் இன்றைய தேதியில் அதிகரித்து வரும் நிலையில், நம் கடவுச்சொற்களை கவனமாக தேர்ந்தெடுப்பது நல்லது !

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?