ஹலோ நான் பேய் பேசுறேன்! இந்தியாவின் இந்த அமானுஷ்ய இடங்கள் பற்றி தெரியுமா?  Canva
இந்தியா

ஹலோ நான் பேய் பேசுறேன்! இந்தியாவின் இந்த அமானுஷ்ய இடங்கள் பற்றி தெரியுமா?

'பேய் இருக்கா இல்லையா....பேய் வர்றதுக்கு ஏதாவது அறிகுறி இருக்கா' என்ற சந்தேகம் இன்னும் இருந்துகொண்டு தான் இருக்கிறது. இப்படி பேயை காரணம் காட்டி நமது நாட்டில் குறிப்பிட்ட சில இடங்கள் இன்னும் ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளது. அந்த அமானுஷ்யங்கள் நிறைந்த இடங்களை இப்பதிவில் காணலாம்.

NewsSense Editorial Team

சிறு வயதில், 'அங்க போகாத பேய் இருக்கு, இங்க போகாத பேய் இருக்கு' என்று அடிக்கடி சொல்லக் கேட்டு நாம் பயந்த விஷயம் பேய். இப்படி பேய் இருப்பதாக சொல்லி நம்மை பயமுறுத்தி வளர்த்திருக்க இப்போது கூட பேய் என்ற பெயரைக் கேட்டாலே கொஞ்சம் நடுக்கம் வரத்தான் செய்கிறது. அதுவும் நிலவு இல்லா ஒரு இரவு, ஆள் நடமாட்டம் இல்லாத அமைதியான இடம் என்றாலே உடனே நமது நினைவுக்கு வருவது பேய் போன்ற அமானுஷ்யங்கள் தான்.

என்னதான், நாடும் மக்களும் படித்து, முன்னேறி இருந்தாலும் கூட உறக்கத்தில் ஏதேனும் ஒரு சத்தம் கேட்டால் ஒருவேளை அது பேயாக இருக்குமோ என்று கொஞ்சம் அச்சப்படத்தான் செய்கின்றனர். இதனால், 'பேய் இருக்கா இல்லையா....பேய் வர்றதுக்கு ஏதாவது அறிகுறி இருக்கா' என்ற சந்தேகம் இன்னும் இருந்துகொண்டு தான் இருக்கிறது. இப்படி பேயை காரணம் காட்டி நமது நாட்டில் குறிப்பிட்ட சில இடங்கள் இன்னும் ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளது. அந்த அமானுஷ்யங்கள் நிறைந்த இடங்களை இப்பதிவில் காணலாம்.

டுமாஸ் கடற்கரை, குஜராத்

குஜராத்தில் உள்ள டுமாஸ் கடற்கரைக்கு இருண்ட மணல் கடற்கரை என்று ஒரு பெயர் உள்ளது. இந்த கடற்கரை முன்னதாக இந்துக்களின் தகன களமாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, இந்த இடத்தில் அவ்வப்போது பலவித அமானுஷ்ய குரல்கள் கேட்பதாகவும், வினோதமான செயல்கள் நடப்பதாகவும், விசித்திரமான விஷயங்களை உணர்வதாகவும் அங்கு சென்றவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக, இந்த பேய் கடற்கரைக்கு சென்றவர்கள் காணாமல் போன சம்பவங்களும் நடந்துள்ளதாம். கொஞ்சம் நடுங்குதா!!

பங்கார் கோட்டை, ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் என்ற மாவட்டத்தில் சரிஸ்கா புலி ரிசர்வ் பகுதியில் அமைந்துள்ளது பங்கர் கோட்டை. இதுவும் பேய்கள் வசிக்கும் பங்களா என்று சொல்லப்படுகிறது. அதாவது, பங்கர் கோட்டையில் இளவரசி ரத்னாவதி என்பவர் இருந்ததாகவும், அவரை ஒரு மந்திரவாதி காதலித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இளவரசியை காதலிக்கும் மந்திரவாதி அவரை தனது மந்திரத்தின் மூலம் அடைய முயற்சித்ததாகவும், பிறகு இளவரசி அந்த மந்திரத்தை அவருக்கே திருப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கோபம் அடைந்த மந்திரவாதி அந்த அரண்மனைக்கு எதிராக மந்திரத்தை எழுதி வைத்து இறந்ததால் அது பேரழிவை ஏற்படுத்தியதாக ஊர் மக்கள் கூறுகின்றனர். எனினும் இந்த கதையின் பின்னால் இருக்கும் உண்மைக் காரணம் எதுவும் முழுதாக வெளிவரவில்லை. இந்த கதை நடிகை அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் வெளியான 'அருந்ததி' படத்தின் திரைக்கதையை ஒத்து வருவதைப் போல இருந்தாலும், இப்படி எல்லாம் சம்பவம் நடந்திருப்பது உண்மையில் ஆச்சரியம் அளிக்கிறது.

சவாய் ஓட்டல், முசோரி

முசோரி பகுதியில் அமைந்துள்ள பேய் ஹோட்டல் சவோய். இந்த ஹோட்டலில் அமானுஷ்ய மனிதர்களின் நடமாட்டம் மற்றும் சில சம்பவங்கள் நடந்திருப்பதாக எழுத்தாளர் அகாத்தா கிறிஸ்டி தனது 'The Mysterious Affair at styles' என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். மேலும், இந்த சவோய் ஹோட்டலில் கார்னட் ஓர்ம் என்ற பெண் கொலை செய்யப்பட்டதாகவும், அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பல ஆண்டுகள் கழித்து அதே நிலைமையில் இறந்து கிடந்ததாகவும் கூறப்படுகிறது.

ஜி பி பிளாக், மீரட்

உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் நகரின் ஜி பி பகுதியில் சில ஆவிகள் சுற்றித் திரிவதாகவும், சிவப்பு ஆடைகளை அணிந்த ஆண்கள் மற்றும் பெண்கள் மது அருந்துவதைப் போன்ற காட்சிகளைக் கண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த காட்சியின் உண்மைத் தன்மையை யாராவது சரிபார்க்க சென்றால் அது உடனே மறைந்து விடுவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

ரவீந்தர் நகர், ஹைதராபாத்

ஹைதராபாத்தில் உள்ள ரவீந்திர நகரில் (கைவிடப்பட்ட நகர்) கடந்த 2012 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக பல தற்கொலைகள் நடைபெற்றன. அதாவது, ரவீந்திர நகரில் இருந்த தேவியின் கோவில் இடிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த சம்பவங்கள் நடைபெற்றதாக சொல்லப்பட்டது. இந்த சம்பவங்களுக்குப் பிறகு பலர் அந்த பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர். என்னவா இருக்கும்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?