குல்தாரா முதல் ஜதிங்கா வரை: மர்மங்கள் நிறைந்த இந்தியா - அமானுஷ்யங்களின் மறுபக்கம்! ட்விட்டர்
இந்தியா

குல்தாரா முதல் ஜதிங்கா வரை: மர்மங்கள் நிறைந்த இந்தியா - அமானுஷ்யங்களின் மறுபக்கம்!

இந்தியாவில் உள்ள அமானுஷ்யம் நிறைந்த சில இடங்கள், அந்த இடங்கள் ஏன் அப்படி பெயர் பெற்றது, அங்கு என்ன நடந்தது என்பதற்கான விளக்கங்களை இப்போது பார்க்கலாம்.

NewsSense Editorial Team

சினிமாக்களில் காட்டப்படும் பொய்யான பேய்களுக்கே தியேட்டர்களில் அலறல் சத்தம் வருகிறது என்றால், நிஜத்தில் பேய் இருக்கிறது என்று சொன்னால் அந்த பயத்தின் அளவை யோசித்து பாருங்கள்.

பேய் எல்லாம் கட்டுக்கதை, அதில் உண்மை இல்லை என்று சொன்னால் கூட அவ்வப்போது நாம் கேள்விப்படும் விஷயங்கள் கண்ணுக்கு தெரியாத ஏதோவொரு அமானுஷ்யம் நம்மைச் சுற்றி இருப்பதை உணர்த்துகிறது. அந்த அமானுஷ்யங்களை தெரிந்து கொள்வதில் சிலருக்கு ஆர்வம் உண்டு.

அப்படி, இந்தியாவில் உள்ள அமானுஷ்யம் நிறைந்த சில இடங்கள், அந்த இடங்கள் ஏன் அப்படி பெயர் பெற்றது, அங்கு என்ன நடந்தது என்பதற்கான விளக்கங்களை இப்போது பார்க்கலாம்.

குல்தாரா கிராமம், ராஜஸ்தான்

இந்த அமானுஷ்ய பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது ராஜஸ்தானில் உள்ள குல்தாரா கிராமம் தான். இந்த கிராமம் ஜெய்சால்மர் பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 1825 ஆம் ஆண்டில் குல்தரா கிராமத்தில் வாழ்ந்த மக்கள் மற்றும் அதனைச் சுற்றி இருந்த 83 கிராமங்கள் மெல்லிய காற்றில் காணாமல் போனதாக கதைகள் சொல்லப்படுகிறது. இதற்கான மர்மம் இன்னுமும் புலப்படவில்லை.

அக்ரசென் கி பாவ்லி, டெல்லி

தேசிய தலைநகரம் டெல்லியில் உள்ள அக்ரசென் கி பாவ்லி ஒரு பழங்கால கட்டிடம் ஆகும். இந்த கட்டிடத்திற்குள் நுழையும் போது ஒரு விதமான பயம் கலந்த உணர்வு ஏற்படுவதாக சுற்றுலாப் பயணிகள் கூறுகின்றனர்.

டிசோசா சால், மும்பை

மும்பையில் உள்ள டிசோசா சால் பகுதியில் இரவு நேரந்தோறும் ஒரு பெண் உலா வருவதாகவும், காலையில் அந்த உருவம் மறைந்துவிடுவதாகவும் அந்த பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேல் நிலை பள்ளிகள், மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தில் உள்ள குர்சியோங் பகுதியில் இயங்கி வந்த விக்டோரியா ஆண்கள் பள்ளி மற்றும் டவ்ஹில் பகுதியில் உள்ள பெண்கள் உறைவிடப் பள்ளிகளில் ஆவிகளின் நடமாட்டம் இருப்பதாகவும், அவ்வப்போது பேய்கள் நடமாடும் சத்தம் கேட்பதாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

தவிர, இந்த பகுதியில் ஒரு தலையில்லாத சிறுவனின் நடமாட்டம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஜதிங்கா கிராமம், அசாம்

அடுத்ததாக அசாம் மாநிலத்தில் உள்ள ஜதிங்கா கிராமம் தற்கொலைகளுக்கு பெயர் போனது.

சுமார் 2500 மக்கள் தொகை கொண்ட இந்த கிராமத்தில் பல ஆண்டுகளாக பறவைகள் மடிந்து விழும் மர்மம் நிலவிக்கொண்டு இருக்கிறது.

லம்பி தேஹார் சுரங்கங்கள், முசோரி

முசோரியில் உள்ள லம்பி தேஹார் சுரங்கங்களில் பணியாற்றி வந்த பலர் பணிச்சுமை, பாதுகாப்பு இழப்பு காரணங்களால் மரணமடைந்துள்ளனர்.

இதையடுத்து, அந்த சுரங்கம் கேட்பாரின்றி விடப்பட்டுள்ளது. இருந்தாலும் அந்த சுரங்கத்தில் இருந்து அவ்வப்போது வித்தியாசமான குரல்கள் எழுவதாக கூறப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?