Did you know that there is a ‘Bangladesh’ in India too? Twitter
இந்தியா

இந்தியாவில் இருக்கும் ‘பங்களாதேஷ்’ குறித்து தெரியுமா? பின்னணி என்ன?

நீண்ட காலமாக, இந்த கிராமம் அரசு பதிவேடுகளில் இடம் பெறவில்லை, பின்னர் பந்திபோராவில் உள்ள DC அலுவலகம் வங்காளதேசத்தின் பெயரை அங்கீகரித்து, 2010 இல் தனி கிராமமாக அடையாளம் காட்டியது.

Priyadharshini R

இந்தியா பல்வேறு கலாச்சாரங்களையும், வரலாற்று இடங்களையும் கொண்டுள்ளது. நீர்வீழ்ச்சிகள், பசுமையான மலைகள், கண்கவர் வரலாற்று சின்னங்கள் என பல்வேறு விஷயங்களை இந்தியா கொண்டுள்ளது.

இந்தியாவில் வங்காளதேசம் என்று ஒரு இடம் இருப்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? எப்படி இந்த பெயர் வந்தது, இந்தியாவில் எங்கு இருக்கிறது என்று இங்கே விரிவாக பார்க்கலாம்.

காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவில் பங்களாதேஷ் என்று அழைக்கப்படும் இந்த சிறிய மற்றும் அழகான கிராமம் அமைந்துள்ளது.

காஷ்மீரில் உள்ள வுலர் ஏரிக்கு அருகில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் மொத்தம் 300 மக்கள் வசிக்கின்றனர். நீர்வீழ்ச்சிகள், மலைகள் என இயற்கையால் சூழப்பட்டுள்ளது இந்த இடம்.

அமைதியான சுற்றுப்புறங்கள், வுலர் ஏரி அழகிய பின்னணி, அதிர்ச்சியூட்டும் இயற்கை அழகுடன் இந்த சிறிய கிராமம் சுற்றுலா வட்டாரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. மீன்பிடித்தல், படகு சவாரி, பறவைகள் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான செயல்பாடுகளை செய்யலாம்.

1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் என்ற நாடு உருவானதன் பின்னர் இப்பகுதிக்கு பங்களாதேஷ் எனப் பெயரிடப்பட்டது.

1971 ஆம் ஆண்டு ஜுரிமோன் எனப் பெயரிடப்பட்ட கிராமம் தீக்கிரையாக்கப்பட்டது.

அப்பகுதி மக்கள் வீடற்றவர்களாக மாறினர். அவர்கள் அந்த இடத்திலிருந்து சிறிது தொலைவில் குடியேறி, அதற்கு பங்களாதேஷ் என்று பெயரிட்டனர்.

முன்பு, 5 முதல் 6 வீடுகள் மட்டுமே இங்கு இருந்தன. இப்போது 50 முதல் 60 வீடுகள் ஆகிவிட்டன. அங்கு இருக்கும் மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர்.

நீண்ட காலமாக, இந்த கிராமம் அரசு பதிவேடுகளில் இடம் பெறவில்லை, பின்னர் பந்திபோராவில் உள்ள DC அலுவலகம் வங்காளதேசத்தின் பெயரை அங்கீகரித்து, 2010 இல் தனி கிராமமாக அடையாளம் காட்டியது.

அரசாங்கம் இப்போது கிராம மக்களுக்கு சிறந்த வசதிகளை வழங்குவதற்கும், சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளது.

இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், உள்ளூர்வாசிகள் அதிக வருமானம் ஈட்டவும், அவர்களின் தரத்தை மேம்படுத்தவும் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?