தீபாவளி: ஆர்டர் செய்யாமல் அடுப்பில் செய்யுங்க - எளிமையான பலகார செய்முறைகள்! Canva
இந்தியா

தீபாவளி: ஆர்டர் செய்யாமல் அடுப்பில் செய்யுங்க - எளிமையான பலகார செய்முறைகள்!

தீபாவளி பலகாரங்கள் என்றாலே வாயில் எச்சூறும். என்ன வேண்டுமோ கடைகளில் ஆர்டர் செய்து வாங்காமல் குழந்தைகள் வேடிக்கைப் பார்க்க அடுப்பில் சுட சுட செய்து கொடுப்பதுதான் சுகம். அப்படி ஏளிமையாக செய்யக் கூடிய பலகாரங்களின் செய்முறைகள் இதோ...

Antony Ajay R

தீபாவளி என்றாலே இனிப்புகள் தான்! என்னதான் கறி சோறு மூன்று வேளையும் சாப்பிட்டாலும் 24 மணிநேரமும் வாயில் பலகாரங்களை நிறைத்திருப்பது தான் தீபாவளியின் சிறப்பே.

முறுக்கு, அதிரசம், சீடையுடன் தீபாவளி ஸ்பெஷலான சில பலகாரங்களின் செய்முறையைக் காணலாம்.

காஜு கத்லி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

முந்திரி - 2 1/4 கப்

சர்கரை - 1 கப்

தண்ணீர் - 100 மில்லி

டார்க் சாக்லேட் - 1 கப்

செய்முறை

முந்திரியை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்

அடிபக்கம் கடினமாக இருக்கும் படியான ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சர்கரை சேர்த்து கொதிக்கவிடவும். சர்கரை முழுவதுமாக கரையும் வரை மிதமான சூட்டில் வைக்கவும். சர்கரைப்பாகு நூல் பதத்துக்கு வர வேண்டும். 15 - 20 நிமிடங்கள் கழித்து அரைத்து வைத்த முந்திரியை பாகுடன் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும். மாவு கெட்டியானதும் சிறிது நேரம் ஆற வைக்கவும்.

கைகளில் நெய் தடவி மாவை நன்றாக உருட்டி பூரி மாவு போல எடுத்துக்கொள்ளவும். பின்னர் மாவை இரண்டு பட்டர் ஷீட்களுக்கு நடுவில் வைத்து நன்றாக உருட்டவும். 5-6 மி.மீ தடிமன் போதுமானது.

மாவு நன்றாக ஆறிய பின்னர் இதனை ஃப்ரிட்ஜில் வைத்து உங்களுக்கு விருப்பமான வடிவில் வெட்டிப் பரிமாறலாம்.

சுசியம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு – 1 கப்
வெல்லம் – 3/4 கப்
துருவிய தேங்காய் – 1/4 கப்
சுக்குப்பொடி – 1/2 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் -1/2 தேக்கரண்டி
மைதா மாவு – 3/4 கப்
அரிசி மாவு – 1/4 கப்
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு (பொரிக்க)

செய்முறை

நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊறவைத்த கடலைப்பருப்பை குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். தேங்காய் துருவி அதனை நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அதே பாத்திரத்தில் வெல்லமும் நீரும் சேர்த்து பாகு தயார் செய்யவும். பாகுடன் கடலைப்பருப்பு மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கிளறி வேக வைக்கவும். பின்னர் இதனுடன் சுக்கு பொடி மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக உருண்டு வரும்வரை கிளறி இறக்கி வைத்தால் சுசியத்துக்கான உள்ளீடு தயார்.

மைதா மாவில் சிறிது உப்பு, தண்ணீர், அரிசி மாவு சேர்த்து தோசை மாவு பதத்தில் எடுத்துக்கொள்ளவும். கொஞ்சம் தண்ணியாக இருக்கலாம்.

ஏற்கெனவே தயார் செய்து வைத்த உள்ளீடு ஆறியப் பின்னர் உருண்டையாக உருட்டி அதனை மாவில் நன்கு மூடும்படி பிரட்டி எடுத்து எண்ணெயில் பொறித்தால் சுட சுட சுசியம் ரெடி!

சுசியம்

நெய் மைசூர் பாக்

தேவையான பொருட்கள்:

 கடலை மாவு - ஒரு கப்

சர்க்கரை - 3 கப்

நெய் - 3 கப்

சமையல் சோடா - ஒரு சிட்டிகை.

செய்முறை

மைசூர் பாக்கு செய்வதற்கு அடிபக்கம் கடினமானபாத்திரம் தேவை.

பாத்திரத்தில் சர்கரையை போட்டு கம்பிப்பதத்தில் பாகு காய்க்கவும்.

பின்னர் அதனுடன் சிறிது சிறிதாக கடலை மாவு சேர்த்து கலக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் நெய் உருக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். நெய் பொங்கும் போது சமையல் சோடா சேர்த்துக் கிளறவும். பின்னர் நெய்யை பாகுடன் சேர்த்து கட்டிப்பதம் வரும் வரை கிளறவும்.

பின்னர் இதனை ஒரு சமதளமான பாத்திரத்தில் ஊற்றி, கட்டியான பின்னர் வெட்டி எடுத்தால் பாரம்பரிய நெய் மைசூர் பாக் ரெடி!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?