coins (Representational) canva
இந்தியா

Depression காரணமாக நாயணயங்களை சாப்பிட்ட நபர் : அதிர்ந்த மருத்துவர்கள் - என்ன நடந்தது?

Keerthanaa R

மன அழுத்தம் காரணமாக 63 ஒரு ரூபாய் நாணயங்களை விழுங்கியிருக்கிறார் ராஜஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர்.

மன அழுத்தம் தற்காலத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் மனிதர்கள் தங்களது நலன் மேல் அக்கறை இழந்து வருவது மட்டுமல்லாமல், ஆபத்தான காரியங்களிலும் ஈடுபடுகின்றனர்.

ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரை சேர்ந்த நபர் ஒருவர் 63 ஒரு ரூபாய் சில்லரைகளை உட்கொண்டுள்ளார்.

கடும் வயிற்று வலி ஏற்பட்டதனால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட இவரை பரிசோதித்த மருத்துவர்கள், வயிற்றுக்குள் உலோக கட்டிகள் இருப்பதை கண்டறிந்தனர். பின்னர் எண்டாஸ்கோபி சிகிச்சை மூலமாக வயிற்றுக்குள் இருந்த உலோகத்தை மருத்துவர்கள் வெளியேற்றினர். இந்த சிகிச்சை மொத்தம் இரண்டு நாட்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர், அந்த நபர் இரண்டு நாட்களில் சுமார் 63 ஒரு ரூபாய் காயின்களை உட்கொண்டுள்ளதாக தெரிவித்தார். மன அழுத்தத்தின் காரணமாக அந்த நபர் இவ்வாறு நாணயங்களை சாப்பிட்டதாகவும், வயிற்று வலியுடன் மருத்துவமனைக்கு வந்தபோது அவர் 10 முதல் 15 காயின்கள் சாப்பிட்டதாக தெரிவித்திருக்கிறார்.

எக்ஸ் ரேவில் உலோக கட்டிகள் இருப்பதை கவனித்த மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சைகள் மேற்கொண்டு, உலோகத்தை அகற்றினர். அவற்றை வெளியில் எடுத்த பின் கணக்கிட்ட போது, அந்த நபர் சொன்னதற்கு மாறாக 63 காயின்கள் உள்ளே இருந்துள்ளன.

மன அழுத்தம் காரணமாக இவர் செய்த காரியத்திலிருந்து மருத்துவர்கள் இவரை மீட்டனர். ஆனால் மன அழுத்தத்தில் இருந்தும் இவர் மீள வேண்டியது அவசியம்.

எண்டேஸ்கோபி செய்த மருத்துவர்கள் இவருக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட வேண்டியது அவசியம் எனக் கூறியிருக்கின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?