எம்.பியாக மீண்டும் நியமனம் செய்யப்பட்ட பிறகு இன்றும் முதல் முறையாக ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ராகுல் பறக்கும் முத்தம் கொடுத்தார்.
அப்போது ராகுல் காந்தி வெளியே செல்லத் தயாரானார். ஸ்மிருதி இராணி தனது உரையை ஆற்றிக்கொண்டிருந்தார்.
இந்தியா டுடே வலைத்தளம் கூறுவதன் படி, பிரதமர் மோடி மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் உரையாற்றி முடித்த ராகுல் காந்தி நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறினார். அப்போது அவர் சில ஃபைல்களை கீழேப் போட, பாஜக எம்.எல்.ஏக்கள் அவரைப் பார்த்து சிரித்துள்ளனர். பின்னர் அவர்களை நோக்கி பறக்கும் முத்தமிட்டு வெளியேறியுள்ளார்.
இந்த நிகழ்வை பாஜக எம்.பிக்கள் வீடியோவாக வெளியிட்டனர்.
ராகுல் காந்தியின் இந்த நடவடிக்கைக் குறித்து ஸ்மிருதி இராணி, "பாராளுமன்றத்தில் பெண் எம்.பி.க்களுக்கு ஒரு பெண் வெறுப்பு (Misogynistic) கொண்ட ஆணால் மட்டுமே பறக்கும் முத்தம் கொடுக்க முடியும். இது போன்ற ஒரு நிகழ்வை இதற்கு முன் பார்த்ததில்லை. இது பெண்களைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பதை காட்டுகிறது. இது ஆபாசமானது." எனக் கடுமையாக பேசியுள்ளார்.
வேளாண் அமைச்சரான ஷோபா கரண்ட்லஜேவும் ராகுல் காந்தியை கடுமையாகத் தாக்கிப் பேசினார். மேலும் ராகுல் காந்தி மீது நாடாளுமன்ற சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரில் பல பெண் எம்.பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர் ஒருவர் கருத்து தெரிவித்ததாக என்.டி.டி.வி தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், பாஜக எம்.பிக்களை சகோதர சகோதரிகளே என அழைத்த ராகுல், செல்லும் முன் மொத்தமாக கருவூல பென்ச்சை நோக்கி முத்தம் கொடுத்தார். அது எந்த ஒரு எம்.பியையும் குறிப்பிடவில்லை" எனக் கூறியுள்ளார்,
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust