மணப்பெண் போல அலங்கரித்து கணவரை சர்ப்ரைஸ் செய்த மனைவி instagram
இந்தியா

மணப்பெண் போல அலங்கரித்து சர்ப்ரைஸ் கொடுத்த மனைவி ; பூரித்த கணவன் - வைரல் வீடியோ

Keerthanaa R

வயது முதிர்ந்த பின்னர் தம்பதியினருக்குள் ஏற்படும் அன்னியோனியம், காதல் மிக அழகானதாக இருக்கும். இணையத்தில் ஏராளமான வீடியோக்களில் வயதான தம்பதியினர் செய்யும் க்யூட் விஷயங்களை நாம் பார்த்திருப்போம்.

அப்படி ஒரு வீடியோ இணையத்தில் தற்போது வலம் வந்துகொண்டு இருக்கிறது. முதியவர் ஒருவர் தன் மனைவியை மணப்பெண் கோலத்தில் பார்த்ததும் பூரிப்படையும் வீடியோ இணையவாசிகளை கவர்ந்துள்ளது. தேவிகா சந்து என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவை பகிர்ந்திருந்தார்.

அதில் அவரது பாட்டி மணப்பெண் அலங்காரத்தில் இருக்கிறார். தன் தாத்தாவை அழைத்து காண்பிக்க, மனைவியை திருமண உடையில் பார்த்த அவர் பூரித்து போகிறார். கைத்தட்டி தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் அவர், தன் மனைவி அருகில் சென்று, துபட்டாவை சரி செய்கிறார்.

இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து மூன்றரை லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. மேலும் 2 மில்லியன் பார்வைகளையும் கடந்திருக்கிறது. தம்பதியினரின் காதலை கண்டு இணையவாசிகள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதற்கு முன்னர் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடலுக்கு தன் மனைவிக்காக நடனமாடிய கணவரின் வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?