putin and biden

 

Facebook

இந்தியா

Morning News Wrap : 500 கோடி சிவலிங்கம் to ஜோ பைடன் எச்சரிக்கை - இன்றைய முக்கிய செய்திகள்

வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இன்றைய முக்கிய செய்திகளை இங்கே தொகுத்துள்ளோம்.

Antony Ajay R

உக்ரைன் விவகாரம்: பைடன் - புதின் தொலைப்பேசியில் எச்சரிக்கை!

சோவியத் யூனியனிலிருந்து உடைந்த நாடான உக்ரைனை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா அதன் எல்லையில் ராணுவத்தைக் குவித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி உதவி செய்து வருகிறது அமெரிக்கா.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் நேற்று தொலைப்பேசியில் பேசிக்கொண்டனர். ஒரு மணி நேரம் வரை அவர்கள் உரையாடியதில், ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கும் என பைடன் எச்சரித்ததாகவும். பொருளாதாரத் தடை இரு நாடுகளுக்கு இடையிலான உறவைப் பாதிக்கும் என புதின் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

பேச்சு வார்த்தை தீவுகளை எட்டாததனால், விரைவில் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனைகளுக்கு தீர்வுகாண இருதலைவர்களும் ஜெனிவாவில் சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

MK Stalin

ஒமிக்ரான் பரவல் - புதிய கட்டுப்பாடுகள்

மழலையர் விளையாட்டுப் பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை.

8-வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்குத் தடை

நடைபெற இருந்த புத்தகக் கண்காட்சிகள் ஒத்திவைப்பு

90ம் வகுப்பு முதல் 120ம் வகுப்பு வரை பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தளங்கள் ஆகியன முறையான வழிமுறைகளை பின் பற்ற அறிவுறுத்தல்.

உணவகங்கள், விடுதிகள், தங்கும் விடுதிகள், பொழுது போக்கு மற்றும் கேளிக்கை பூங்காக்கள், துணிக் கடைகள், நகைக்கடைகள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு அரங்கங்கள், உணவகங்கள், மெட்ரோ ரயில் இருக்கைகள், திரையரங்குகள், அழகு நிலையங்கள் மற்றும் சலூன்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி

திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி

இறப்பு நிகழ்வில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.

Emerald Lingam

500 கோடி மதிப்பிலான மரகத லிங்கம் மீட்பு

தஞ்சை மாவட்டம் அருளானந்த நகரில் உள்ள ஒரு வீட்டில் தொன்மையான சிலைகள் பதுக்கியிருப்பதாகச் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. தகவலை பின்பற்றி, அருளானந்த நகரில் உள்ள சாமியப்பன் என்பவரது வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, பல கோடி ரூபாய் மதிப்புள்ள தொன்மையான பச்சை மரகத லிங்கம் அவரின் வங்கி லாக்கரில் இருப்பது தெரிய வந்தது.

விசாரணையில், அது கடந்த 2016 ஆம் ஆண்டு நாகை மாவட்டம் திருக்குவளை கோவிலில் காணாமல் போன மரகத லிங்க சிலை எனத் தெரியவந்திருக்கிறது.

சாமியப்பனுக்கு எப்படி அந்த சிலை கிடைத்தது? உண்மையாகவே நாகப்பட்டினத்தில் உள்ள சிலை தானா? என விசாரணை நடைபெற்று வருகிறது.

Indian U-19Cricket Team

அண்டர் 19-ல் ஆதிக்கம் செய்யும் இந்தியா

பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று வெற்றி பெற்றதன் மூலம் 8வது முறையாக கோப்பையை கைப்பற்றியிருக்கிறது இந்திய அணி.

இந்திய கிரிக்கெட்டின் 2021 சிறந்த வெற்றியுடன் நிறைவடைந்திருக்கிறது. இதுவரை நடந்துள்ள 9 ஆசியக்கோப்பை அண்டர் 19 தொடர்களில் 7 தொடர்களை இந்தியா வென்றுள்ளது. மற்றும் 2012 இந்தியா - பாகிஸ்தான் போட்டி ட்ரா ஆனது. 2017 தொடரை இழந்த பின் தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தொடரை கைபற்றி தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியிருக்கிறது இந்திய அணி

India and China

இந்திய எம்.பிகளுக்கு சீனா கடிதம்

சீனாவின் தன்னாட்சிப் பகுதியான திபெத் இந்தியாவுடனான கலாச்சார தொடர்பை உறுதி செய்யும் வகையில் டெல்லியில் திபெத் நாடாளுமன்றம் சார்பிலான கூட்டம் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட எம்.பிகளுக்கு சீன தூதரகம் தனிப்பட்ட முறையில் “திபெத் விவகாரத்தில் தலையிட வேண்டாம்” எனக் கடிதம் எழுதியிருக்கிறது.

இந்த கடிதத்துக்கு மத்திய அரசு சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. சீனாவுக்கு இந்தியாவில் எதாவது பிரச்சனை இருந்தால் அதனை வெளியுறவுத் துறையிடம் தான் தெரிவிக்க வேண்டும். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி விதிமுறைகளை மீறியுள்ளது சீனா.

ஏற்கெனவே கிழக்கு லடாக் எல்லை விவகாரத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. அருணாசலப் பிரதேசத்தின் 15 பகுதிகளுக்குச் சீனா பெயர்களை அறிவித்து இந்தியாவை மேலும் சீண்டி வருகிறது. இந்த சூழலில் இந்தக் கடிதமும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?