நாம் அணியும் ஆடைக்கும் நம் பாலினத்துக்கும் தொடர்பு இருப்பது அவசியமா? பாலினத்தைக் கடந்து தாங்கள் விரும்பிய உடைகளை அணிய மனிதர்களுக்கு உரிமை இருக்க வேண்டுமா என்ற கேள்விகள் சிலகாலமாக எழுந்துள்ளன.
சமீபத்தில் கேரளாவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே சீருடை என்ற வழக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பாலினத்தவர்கள் இந்த உடையைத் தான் அணிய வேண்டும் என்ற வழக்கத்தை மாற்றும் முயற்சியை சில இளைஞர்கள் மேற்கொண்டுள்ளனர்.
சமீர்கான் என்ற இன்ஸ்டாகிராம் பயனர் தனது பக்கத்தில் இளைஞர்கள் மெட்ரோவில் பாவாடை அணிந்து செல்லும் வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் விவாதத்தை எழுப்பியுள்ளது.
அந்த வீடியோவில் இரண்டு ஆண்களும் எதைப்பற்றியும் கவலையில்லாமல் பாவாடையில் மெட்ரோவில் வலம் வந்தனர்.
வீடியோவில் சுற்றியிருக்கும் ஆட்கள் அந்த இளைஞர்களை கொஞ்சம் வித்தியாசமாகப் பார்த்தனர்.
“ஆண்கள் லுங்கி அணியும் போது பாவாடை அணிவதில் என்ன பிரச்னை” என நெட்டிசங்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
“இந்த ஸ்கர்ட் மிகவும் வசதியாகவும் ஸ்டைலாகவும் இருக்கும் போது ஏன் இதை அனைவரும் அணியக் கூடாது” எனவும் கமண்ட்கள் வந்துள்ளன.
அந்த இரண்டு ஆண்களுக்கு ஆதரவாக பல கமண்ட்கள் காணப்பட்டன. ஆனாலும் சிலர், “இப்படி மாடர்னாக இல்லாமல் உங்கள் ஆண்மையுடன் நடந்துகொள்ளுங்கள்” என எதிர்கருத்துகளும் தெரிவித்திருக்கின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust