அயோத்தி ராமர் கோவில் போலவே 11 அடி உயர கோவிலை உருவாக்கிய இஞ்சினியர்! - எங்கே? Twitter
இந்தியா

அயோத்தி ராமர் கோவில் போலவே 11 அடி உயர கோவிலை உருவாக்கிய இஞ்சினியர்! - எங்கே?

Antony Ajay R

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில் போலவே தனது வீட்டில் 11 அடி உயரத்தில் கோவிலைக் கட்டியுள்ளார் இஞ்சினியர் ஒருவர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் பிரஃபுல்லா மாடேகான்கர் என்ற சிவில் இஞ்சினியர். இவர் ராமர் மீதான தனது பக்தியையும் தன் தொழில்திறனையும் ஒருங்கிணைத்து ராமர் கோவிலை எழுப்பியிருக்கிறார்.

வரும் 22ம் தேதி திறக்கப்படும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் தன்னால் கலந்துகொள்ளா முடியாது என்பதற்காக இந்த கோவிலைக் கட்டியிருக்கிறார், 22ம் தேதியே இந்த கோவிலிலும் ராமர் சிலையை வைக்கவுள்ளார்.

பிரஃபுல்லா மாடேகான்கர் ஒரு சிவில் இஞ்சினியர் என்பதனால் ராமர் கோவில் வடிவமைப்பு குறித்து இணையத்தில் இருக்கும் ஒவ்வொரு வடிவமைப்பையும் ஆராய்ந்து கிராபிக்ஸ் டிசைனை உருவாக்கியுள்ளார்.

கடந்த தீபாவளிக்கு முன்பிருந்தே தீவிரமாக ராமர் கோவில் கட்டும் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். பலரும் இவரது அற்பணிப்பை பாராட்டி வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?