மும்பை ஐ.ஐ.டி., மும்பை ஜஸ்லோக் மருத்துவமனையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, கொரோனா வைரஸ், ஆண்களின் குழந்தை பேறு திறனில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை அறிய ஒரு ஆய்வை நடத்தினர்.
அந்த ஆய்வில், குழந்தை பேறு பிரச்னையில்லாத 20 முதல் 45 வயது வரையிலான 10 நன்கு ஆரோக்கியமானவர்கள், 17 லேசான, மிதமான கொரோனாவால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் குணமடைந்தவர்கள் என 27 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர்.
27 ஆண்களின் விந்தணுவில், இனப்பெருக்க நிகழ்வுடன் தொடர்புடைய புரோட்டீன்களை ஆய்வுசெய்து ஒப்பிட்டு பார்த்திருக்கின்றனர் அப்போது, கொரோனா தாக்காத ஆண்களின் புரோட்டீன்களைவிட ,கொரோனா பாதித்து ஏற்பட்டு குணமடைந்த ஆண்களின் புரோட்டீன்கள் பாதிக்கும் குறைவாக இருந்துள்ளன. விந்தணு எண்ணிக்கையும் கணிசமாக குறைந்திருக்கிறது.
லேசான, மிதமான கொரோனா பாதிப்புகூட ஆண்களின் குழந்தை பேறு திறன் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிப்பு ஏற்படுத்தி, மலட்டுத்தன்மைக்கு காரணமாக இருப்பதாக இந்த ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் இதை மேலும் உறுதிப்படுத்த பெரிய அளவிலான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.