famous tribal museums to visit in india Twitter
இந்தியா

இந்தியாவில் நிச்சயம் பார்க்க வேண்டிய புகழ்பெற்ற பழங்குடி அருங்காட்சியகங்கள்

இந்திய பழங்குடியினரின் புகழ்பெற்ற கடந்த காலத்தைப் பற்றிய அறிய விரும்புவோர், பார்க்க வேண்டிய சில கண்கவர் பழங்குடி அருங்காட்சியகங்கள் உள்ளன. அவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்.

Priyadharshini R

பழங்குடிகள் என்போர் தொன்றுதொட்டு கிட்டதட்ட 10,000 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி பழக்க வழக்கங்களும் மொழியும் கொண்டுள்ளனர்.

இந்தியாவில் புகழ்பெற்ற பழங்குடியினர் அருங்காட்சியகங்கள் உள்ளன. நாகாலாந்தில் உள்ள நாகர்கள் முதல் நீலகிரியில் உள்ள குரும்பா பழங்குடியினர் வரை நாட்டில் பல பழங்குடியினர் உள்ளனர்.

இந்த பழங்குடியினரின் வரலாறு மற்றும் பாரம்பரியம் முற்றிலும் தனித்துவமானது மற்றும் அற்புதமானது. இந்த இந்திய பழங்குடியினரின் புகழ்பெற்ற கடந்த காலத்தைப் பற்றிய அறிய விரும்புவோர், பார்க்க வேண்டிய சில கண்கவர் பழங்குடி அருங்காட்சியகங்கள் உள்ளன. அவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்.

பழங்குடியினர் அருங்காட்சியகம் - போபால்

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பழங்குடியினரால் கட்டப்பட்ட அருங்காட்சியகங்களில் இதுவும் ஒன்று. இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே பழங்குடியினருக்குச் சொந்தமான அழகான கலைப்பொருட்கள் மற்றும் கருவிகளை நீங்கள் காணலாம்.

இந்த பழங்குடியினரின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஆறு காட்சியகங்கள் இங்கு உள்ளன.

பழங்குடியினர் அருங்காட்சியகம் - அரக்கு பள்ளத்தாக்கு

அரக்கு பள்ளத்தாக்கில் உள்ள பழங்குடியினர் அருங்காட்சியகம் மண் மற்றும் உலோகத்தைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகம் இப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையை எடுத்துரைக்கிறது.

இங்குள்ள அழகான வண்ணமயமான கலைப்படைப்புகள், ஜவுளிகள் மற்றும் பாத்திரங்களைக் கண்டு நீங்கள் திகைப்பீர்கள்!

பழங்குடியினர் அருங்காட்சியகம் - ஒடிசா

ஒடிசா மாநில பழங்குடியினர் அருங்காட்சியகத்தின் சிறப்பே மாநிலத்தின் 62க்கும் மேற்பட்ட சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்துவது தான்!

இந்த அருங்காட்சியகத்தில் பழங்குடியினரால் உருவாக்கப்பட்ட ஐந்து பழங்குடியினர் வீடுகள் உள்ளன. உள்ளே அழகான மூலிகை தோட்டமும் உள்ளது. நீங்கள் பல அழகான கலை பொருட்களை இங்கு காணலாம்.

Living and Learning Design Centre

இந்த பழங்குடியினர் அருங்காட்சியகம் நாட்டில் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.பெண்களை மையமாகக் கொண்ட இந்த அருங்காட்சியகத்தில் 12க்கும் மேற்பட்ட வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் ஐம்பது வகையிலான பழங்குடி எம்பிராய்டரிகளைத் தயாரித்துள்ளனர்.

இவை அனைத்தும் எல்எல்டிசியில் காட்சிப்படுத்தப்படுகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?