ரொஹித் கோலிக்கு 100 அடி உயர கட் அவுட் ட்விட்டர்
இந்தியா

ரோஹித் - கோலிக்கு 100 அடி உயர கட் அவுட் : கேரளாவில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

Keerthanaa R

ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு கட் அவுட் வைத்துள்ளனர் கிரிக்கெட் ரசிகர்கள் 

இந்தியாவில் பெரிதும் கொண்டாடப்படுவது சினிமா மற்றும் கிரிக்கெட். தங்களுக்கு பிடித்த திரை நட்சத்திரங்களுக்கு கட் அவுட் வைப்பது ஆதி காலம் தொட்டு இப்போது வரை இருந்து வருகிறது. அந்தந்த நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகும் நாட்களை திருவிழாவை போன்று கொண்டாடுவர். தற்போது இந்த கலாச்சாரம் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் வந்துள்ளது. 

இன்று தென் ஆப்ரிக்கா அணியை எதிர்கொள்ளவிருக்கிறது இந்திய அணி. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் கலந்துகொள்ள இந்தியா வந்துள்ளனர் தென் ஆப்ரிக்க வீரர்கள். இந்நிலையில், முதல் டி20 போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடக்கவுள்ள நிலையில் இந்திய அணி வீரர்களின் கட் அவுட் வைத்து அமோக வரவேற்பு அளித்துள்ளனர் ரசிகர்கள். 

இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா. கடந்த இரண்டு வருடங்களாக ஃபார்ம் அவுட்டில் இருந்த விராட் கோலி, ஆசியக் கோப்பை தொடரில் மீண்டெழுந்தார்.

இந்திய அணியின் புதிய கேப்டன் ரோஹித் சர்மாவும், தன் பங்கிற்கு தலைமை ஏற்றது முதல் வெற்றிகளை குவித்து வருகிறார். இந்நிலையில், அவர்களது வருகையை கொண்டாடும் விதமாக இருவரின் ரசிகர்களும் மிகப் பெரிய கட் அவுட்களை வைத்துள்ளனர். இந்த கட் அவுட்கள் கிட்ட தட்ட 100 அடி உயரம் உள்ளன. கேரள வீரரான சஞ்சு சாம்சனுக்கும் பெரிய அளவிலான கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது

Virat Kohli

இது ஒரு புறம் கோலி ரோஹித் ரசிகர்களின் fan war ஆகவும் பார்க்கப்படுகின்றது. எனினும், நடக்கவிருக்கும் போட்டிக்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுடனான டி20 தொடரை இந்திய 2-1 என கைபற்றியது குறிப்பிடத்தக்கது. 

அக்டோபர் மாதம் டி20 உலகக்கோப்பை துவங்கவுள்ளது. கடந்த வருடம் லீக் சுற்றிலேயே இந்திய அணி வெளியேறியதால், இம்முறை உலகக்கோப்பைக்கான எதிர்பார்ப்பும் அதிகமாகவுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?