Infant  Pexels
இந்தியா

பிறந்து 40 நாட்களான ஆண் குழந்தையின் வயிற்றில் கரு - நடந்தது என்ன ?

பீகாரில் பிறந்து 40 நாட்களே ஆன ஒரு ஆண் குழந்தையின் வயிற்றில் மற்றுமொரு கரு இருந்துள்ளது. குழந்தையின் வயிற்றின் வீக்கம் குறையாமல், குழந்தை சிறுநீர் கழிக்க முடியாமலும் தவித்து வந்ததால், பரிசோதனையில், வயிற்றில் இன்னுமொரு கரு இருந்தது தெரியவந்துள்ளது.

Keerthanaa R

சமீபத்தில், அமெரிக்காவில் நிரந்தர புன்னகையுடன் ஒரு குழந்தை பிறந்த சமபவம் ஒன்று இணையதளத்தில் வைரலானது. ஆயிரக்கணக்கான குழந்தைகள் தினமும் உலகில் பிறந்துகொண்டிருக்கும் வேளையில், அவற்றில் சில குழந்தைகள் நம்மை வியக்கவைக்கின்றது. அதுபோலவே, பீகாரில் பிறந்த ஒரு குழந்தையின் வயிற்றில் மற்றுமொரு கரு இருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பிறந்து 40 நாட்களே ஆன ஒரு ஆண் குழந்தைக்கு வயிற்றின் வீக்கம் குறையாமல், குழந்தை சிறுநீர் கழிக்க முடியாமலும் தவித்து வந்துள்ளது. பயந்துபோன பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். பரிசோதனையில், வயிற்றில் இன்னுமொரு கரு இருந்தது தெரியவந்துள்ளது.

Infant

Fetus in fetu என்றழைக்கப்படும் அறிய வகை குறைபாட்டால் இந்த கரு அந்த குழந்தையின் வயிற்றில் உருவாகியிருக்கிறது என்று ரஹ்மானியா மருத்துவ மைய மருத்துவர் தப்ரேஸ் அஜீஸ் விளக்கமளித்தார். அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இப்போது நலமாக இருக்கிறது என்று டாக்டர் தப்ரேஸ் தெரிவித்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?