டால்ஃபீன்கள பிடித்து சாப்பிட்ட கும்பல்: வைரல் வீடியோவால் மாட்டிக்கொண்டது எப்படி? Twitter
இந்தியா

டால்ஃபீன்களை பிடித்து சாப்பிட்ட கும்பல்: வைரலான வீடியோ - எங்கே?

19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 10000 ஆக இருந்த டால்ஃபீன்களின் எண்ணிக்கை 2014 ஆண்டு 3526ஆக குறைந்தது. இப்போது 2000க்கும் குறைவான டால்ஃபீன்களே இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Antony Ajay R

வட இந்திய மாநிலமான உத்திரபிரதேசத்தில் டால்பீன் சாப்பிட்டதாக 5 மீனவர்கள் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

யமுனை நதியில் இருந்து இவர்கள் டால்ஃபீன் பிடித்ததாக கூறப்பட்டுள்ளது. இவர்கள் டால்ஃபீன் பிடித்து சாப்பிட்ட வீடியோ வைரலானதை அடுத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குற்றவாளிகளில் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும், மற்றவர்களை கைது செய்வது குறித்து விசாரணை நடத்திவருவதாகவும் கௌஷபி காவல்துறையினர் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளி ரஞ்சித் என அடையாளம் காணப்பட்டுள்ளார், சஞ்சய், திவான், பாபாஜி மற்றும் கெண்டலால் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர்.

டால்ஃபீன்கள் அறிவுக் கூர்மை மிக்கதாகவும், மனிதர்களிடம் அன்புடன் பழகக்கூடியதாகவும் இருப்பதனால் டால்ஃபீன்களை பிடித்து சாப்பிட்ட சம்பவம் நெட்டிசன்களிடம் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


கங்கையில் இருக்கும் டால்ஃபின்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒரு காலத்தில் கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் துணை நதிகள் எல்லாம் டால்ஃபீன்கள் நிறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விரைவான தொழில்மயமாக்கல், பூச்சிக்கொல்லிகள், உரங்கள் மற்றும் பிற இரசாயன பொருட்களின் பயன்பாடு டால்ஃபீன்கள் அழிவுக்கு காரணமாக இருந்துள்ளது.

19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 10000 ஆக இருந்த டால்ஃபீன்களின் எண்ணிக்கை 2014 ஆண்டு 3526ஆக குறைந்தது. இப்போது 2000க்கும் குறைவான டால்ஃபீன்களே இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கங்கை டால்ஃபீன்கள் பார்வையற்றவை. அவை நீந்தவும் உணவைக் கண்டிபிடிக்கவும் எக்கோலோஷனைப் பயன்படுத்துகின்றன.

மாசு, வாழ்விடம் குறுகிவருதல், வேட்டையாடுதல் ஆகிய காரணங்களால் இந்த மீன்கள் இனம் அழிந்து வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?