Assam Flood Twitter
இந்தியா

Assam: வெள்ளத்தில் தத்தளிக்கும் மாநிலம்- 7 பேர் பலி, 2 லட்சம் பேர் பாதிப்பு

Keerthanaa R

வடகிழக்கு மாநிலமான அசாம் மற்றும் அதன் சில சுற்றுவட்டார மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அசாம் மாநிலம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. லகீம்பூர், நகாவான் போன்ற மாவட்டங்களில், சாலைகள், பாலங்கள் நீரில் மூழ்கியதால், போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. மொத்தம் 24 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்திருப்பதாக தகவல்கல் வெளியாகியுள்ளன. அதில் கேட்சர், சரேடியோ, தாரங், தேமாஜி, திப்ருகர், நல்பாரி உள்ளிட்ட மாவட்டங்களும் அடங்கும். இதை தவிர 12 கிராமங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்.

மேலும், ரயில் இணைப்பு பாதைகளிலும் நீர் தெங்கியுள்ளதால், மீட்பு பணிகள் தாமதமாகியிருக்கிறது. பேரிடர் மேலாண்மை ஆணையம் நிவாரண முகாம்கள் அமைத்துள்ளன. காவல் துறை, மீட்பு படையினருடன் இணைந்து வருவாய்த்துறையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

திமா ஹசாவோ நகரிலுள்ள ஹாஃப்லாங் ரயில் நிலையம் முழுவதும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. மேலும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்து கடினமாக பாதிப்படைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் அமைந்துள்ள பகுதி, மலைகள், சுரங்கங்கள், குன்றுகள் சூழ்ந்துள்ளதால், நிலச்சரிவுகள் ஏற்பட்டு, தண்டவாளங்கள் முழுவது சேற்றில் மூழ்கியுள்ளது. இதனால் சில ரயில்கள் தடம் புறழ, சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பயணிகள் யாரும் இல்லாததால் உயிர்பலிகள் இல்லை.

Railway Station inundated

எனினும், எஞ்சிய இடங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளதாகவும், வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்ததால் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?