Ambani NewsSense
இந்தியா

அம்பானி, அதானி மற்றும் ஒரு தமிழர் : இவர்கள்தான் இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள்

இந்த ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி முதலிடம் பெற்றுள்ளார். கடந்த வருடமும் இந்த பட்டியலில் இவர்தான் முதல் இடம் பிடித்திருந்தார்.

ஆதிரை

இந்த ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி முதலிடம் பெற்றுள்ளார். கடந்த வருடமும் இந்த பட்டியலில் இவர்தான் முதல் இடம் பிடித்திருந்தார்.

அட என்னப்பா ஏதாச்சும் புதுசா சொல்லுங்க என்ற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது. ஆனால் போன வருடம் முதல் மூன்று இடத்தை பிடித்தவர்கள் இந்த வருடமும் அந்த இடத்தை தக்க வைச்சிருக்காங்க.

மார்ச் மாதம் வரைக்கும் ரியலைன்ஸ் குழுமத்தின் தலைவரான அம்பானியின் சொத்து மதிப்பு 90.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 68,48,62,54,85,000.

இவருக்கு அடுத்தபடியாக இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் கெளதம் அதானி. அதானி குழுமத்தின் தலைவரான இவரின் சொத்து மதிப்பு 90 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (67,93,56,45,00,000).

இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருப்பவர் ஹெச் சி எல் நிறுவனத்தின் ஷிவ் நாடார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 28.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதானிக்கும் அம்பானிக்கும் இடையில் இருந்த சொத்து மதிப்பு வித்தியாசம் வெறும் 0.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

ஆனால் இவர்களுக்கும் ஷிவ் நாடாரின் சொத்து மதிப்பிற்கும் பாதிக்கும் மேல் வித்தியாசம் உள்ளது.

அடுத்தப்படியாக நான்காவது இடத்தில் உள்ள ஒரு நிறுவனம் கொரோனா காலத்தில் நமக்கு மிகவும் பரிட்சையமான ஒரு நிறுவனம்.

ஆம் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் சிரஸ் பூணாவாலாதான் இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். அவரின் மொத்த சொத்து மதிப்பு 24.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள். சிரஸ் பூணாவாலா குழுமத்தின் தலைவராகவும், எம்.டி யாகவும் உள்ளார் சிரஸ் பூணாவாலா. இந்த குழுமத்திற்கு சொந்தமானதுதான் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா.

இந்த பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருப்பவர் அவன்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ராதாகிருஷன் டாமனி. இவரின் சொத்து மதிப்பு 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

அடுத்து 6ஆவது இடத்தில் லக்ஷ்மி மிட்டல் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 17.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

7ஆவது இடத்தில் ஜிண்டால் குழுமத்தின் நிறுவனர் ஓம் பிரகாஷ் ஜிண்டாலின் மனைவி சாவித்ரி ஜிண்டால் உள்ளார். இந்த பட்டியலில் உள்ள ஒரே பெண் இவர்தான். இவரின் மொத்த சொத்து மதிப்பு 17.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இவரின் அரசியலிலும் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எட்டாவது இடத்தில் ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் பிர்லா உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 16.5பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

9ஆவது இடத்தில் சன் ஃபார்மடிக்கல்ஸின் திலிப் சங்வி உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 15.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

10ஆவது இடத்தில் கோடக் மகேந்திரா வங்கியின் உதய் கோடக் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 14.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?