Mother Teresa Charity

 

Twitter

இந்தியா

அன்னை தெரசா சேவை மையத்தின் உரிமம் புதுபிக்கப்பட்டது!

Antony Ajay R

மேற்குவங்கம், கொல்கத்தாவில் இயங்கி வரும் அன்னை தெரசா சேவை மையத்துக்கு வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி வருவது வழக்கம். அந்த நிதியுதவியைப் பெறுவதற்கான அனுமதியை புதுப்பித்துத் தர வெளியுறவுத் துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்ததாகத் தகவல் வெளியானது.

மனிதாபிமான விஷயங்களில் சமரசம் காட்டக்கூடாது

இது அரசியல் களத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்த, உரியச் சான்றிதழ்களைச் சரியாக சமர்பிக்காதது தான் அனுமதி மறுக்கப்பட்டதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது. ஆனாலும் கிறிஸ்துமஸ் தினத்தில் அன்னை தெரசா சேவை மையத்தின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி மத்திய கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். “மத்திய அரசின் இந்த நடவடிக்கை அன்னை தெரசா சேவை மையத்தின் 22,000 நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்களை உணவு, மருந்துகளின்றி தவிக்க வைத்துள்ளது” எனக் கூறினார். மேலும், “சட்டம் மிக முக்கியம் ஆனால் மனிதாபிமான விஷயங்களில் சமரசம் காட்டக்கூடாது” என ட்விட் செய்தார் மம்தா.

Mother Teresa Charity

இதனையடுத்து, வெளிநாட்டு நிதி உதவி பெறுவதற்கான அனுமதியைப் புதுப்பிக்க, உரிய ஆவணங்களைத் தாக்கல் செய்யச் சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு உள்துறை அமைச்சகம் மற்றொரு வாய்ப்பை வழங்கியது. அதன் படி, டிசம்பர் 31 வரை அனுமதி பெறுவதற்கான ஆவணங்களை அளிக்க காலநீட்டிப்பு செய்யப்பட்டது. பின்னர் மீண்டும் முயன்று அனுமதி வாங்கியது அன்னை தெரசா சேவை மையம். மேலும், டெல்லி பல்கலைக்கழகத்தின் சேவை மையம் உள்ளிட்ட 25-க்கும் அதிகமான தொண்டு நிறுவனங்களின் அனுமதியும் புதுப்பித்துத் தரப்பட்டது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?