உலக பணக்காரர்கள் பட்டியலில் கெளதம் அதானி இடத்தை பிடித்துள்ளார். அதானி குழுமத்தின் தலைவரான கெளதம் அதானி சுமார் 118 பில்லியன் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 6வது இடத்தை பிடித்துள்ளார்.
ஏப்ரல் 11 ஆம் ஒரே நாளில் ரூ.68 ஆயிரம் கோடி உயர்ந்து கெளதம் அதானியின் சொத்து மதிப்பு உயர்ந்து உலக பணக்காரர்களின் வரிசையில் 6-வது இடத்தை பிடித்துள்ளார்.
கெளதம் அதானியின் சொத்து மதிப்பு தற்போது ரிலையன்ஸ் குழும நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி மற்றும் கூகுள் நிறுவனத்தை சேர்ந்த லேரி பேஜ் மற்றும் செர்ஜிபிரின் ஆகியோரை விட அதிகமாக உள்ளது. கவுதம் அதானியின் 7 நிறுவனத்தின் பங்குகளின் விலையால் அவரது சொத்து மதிப்பும் அதிகரித்து உள்ளது.
இதனால் உலக பணக்காரர்கள் பட்டியலில் கெளதம் அதானி 6வது இடத்தை பிடித்துள்ளார்.
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, எலோன் மஸ்க் 259 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்.
ஜெஃப் பெசோஸ் 180 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்திலும், பெர்னார்ட் அர்னால்ட் 142 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்திலும், பில் கேட்ஸ் 130 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.
வாரன் பஃபெட் 125 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார். முகேஷ் அம்பானி 94.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 11வது இடத்தில் உள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com