Mahua Moitra

 

Twitter

இந்தியா

மஹுவா மொய்த்ரா : “கோமியம் குடித்து விட்டு தயாராக இருங்கள்” - பாஜகவினருக்கு சவால்

Antony Ajay R

"கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள். நான் இன்று மாலை அவையில் பேசுகிறேன்" என்று பாஜகவினருக்கு ட்விட்டர் வாயிலாக சவால் விடுத்துள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா.


பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறி வருகிறது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர் “இந்தியா என்பது ஒரு ராஜ்ஜியம் அல்ல” எனப் பேசியிருந்தார். தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா பேச்சும் அனல் பறந்தது. “ஏழைகளின் கண்ணீர் வாளை விடக் கூர்மையானது” என சிவா பேசியிருந்தார். தற்போது அடுத்ததாக ஒரு எதிர்க்கட்சி எம்.பி பரபரப்பை ஏற்படுத்தும் ட்விட் போட்டிருப்பது நாடாளுமன்ற உரைகளின் மீதான ஆர்வத்தை அதிகரித்திருக்கிறது.

Mahua Moitra

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இவரது பேச்சு நாடாளுமன்றத்தை அதிரவைத்தது, "அதிகார மமதை, வெறுப்பு, மதவெறி, பொய் ஆகியவற்றால் மறைந்திருக்கும் கோழைகள், இந்த விஷயங்களை வீரம் என்று கருதுகிறார்கள். இந்த அரசும், தனது பிரச்சாரத்தில் பொய்களைப் பரப்புவதன் மூலம் கோழைத்தனத்தை வீரம் என்று காட்டுவதை தங்களது மிகப்பெரிய வெற்றியாகக் கருதி வருகிறது" என அனல் பறக்க பேசியிருக்கிறார்.

இப்போது மீண்டும் பட்ஜெட்டில் பேசப்போகும் அவர், "இன்று மாலை நான் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான தீர்மானத்தின் போது பேசுகிறேன். பாஜகவினரே, கற்பனைக் கதைகளைக் கட்டவிழ்க்கும் உங்களுடைய தாக்குதல் படையைத் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். வேண்டுமென்றால் கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள்" என ட்விட் செய்து உரையின் டீசராக பதிவிட்டுள்ளார்.

ஏற்கெனவே பேசிய பல எதிர்க்கட்சி தலைவர்களும் பட்ஜெட்டை திட்டித்தீர்த்து வரும் நிலையில் மஹுவா-வின் பேச்சுக்கும் அதனை பாஜக-வினர் எப்படி எதிர்கொள்ளப் போகின்றனர் எனக் காணவும் பட்ஜெட் உரை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?