கோவா: பண்டைய சிறைச் சாலையில் திறக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் - சிறப்புகள் என்ன? twitter
இந்தியா

கோவா: சிறைச் சாலையில் திறக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் - சிறப்புகள் என்ன?

கோவாவில் புதியதொரு அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம், முன்னர் சிறைச்சாலையாக செயல்பட்ட கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள்ளது

Keerthanaa R

இந்தியாவில், அனைத்து வயதினராலும் மிகவும் விரும்பப்படும் இடம் என்றால் அது கோவா தான்.

ஒரு முறையாவது கோவாவுக்கு ட்ரிப் சென்று விடவேண்டும் என்பது எல்லாரின் ஆசை. போர்த்துகீசியர்களின் காலனியாக இருந்த கோவாவில், வரலாற்று சிறப்புகளும் உள்ளன, நேர்மாறாக, கொண்டாடி தீர்க்க என்டெர்டெயின்மென்ட்களும் உள்ளன.

இந்நிலையில், கோவாவில் புதியதொரு அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம், முன்னர் சிறைச்சாலையாக செயல்பட்ட கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள்ளது

இது ஒரு ஊடாடும் அருங்காட்சியகம் (interactive museum) ஆகும். இது கோவாவில் உள்ள அகுவாட் மத்திய சிறையில் திறக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் அகுவாட் இன்டராக்டிவ் மியூசியம்: கோவா - நிலம், போராட்டம், மக்கள்

இது மொத்தம் மூன்று சிறைச்சாலைகளில் பரவியுள்ளது. இதனை திறந்து வைத்த கோவாவின் சுற்றுலா தூறை அமைச்சர் ரோஹன் கவுன்டே, சுற்றுலா பயணிகள் கோவாவின் கலாச்சாரம், வரலாறு மற்றும் வளர்ச்சியை புரிந்துகொள்ள உதவும் என்றார்.

இந்த அகுவாடா சிறைச்சாலை 1612ஆம் ஆண்டு கட்டப்பட்டது

மூன்று பாகங்களாக இருக்கிறது இந்த மியூசியம். முதல் அறையை, கோவா: தி லேண்ட் என்று பெயரிட்டுள்ளனர்.

இங்கு பார்வையாளர்கள் கோவாவின் முக்கியமான இடங்களை ஊடாடும் 3D வரைபடத்தின் மூலம் ஆராயலாம். டிஸ்கவர் கோவா கன்சோல், மாநிலத்தின் அதிகம் அறியப்படாத தகவல்களை வழங்குகிறது.

சிறுகதைகள் வடிவில் கடந்த காலக் கதைகளைச் சொல்லும் தனித்துவமான கதை விற்பனை இயந்திரமும் உள்ளது.

கோவா: தி ஸ்ட்ரகுள் என பெயரிடப்பட்டுள்ள அடுத்த அறை இந்த இடத்தின் வரலாற்றை எடுத்துரைக்கிறது. டைம் மெஷின் விளையாட்டு முக்கியமான தேதிகள், அன்று நடந்த நிகழ்வுகளை காட்சிப்படுத்துகிறது. மேலும் freedom fighters wall-லில் கோவாவின் சுதந்திரத்துக்காக போராடியவர்கள் குறித்த விவரங்கள் வழங்கப்படுகிறது. இங்கு மெச்சேஜ் இன் ஏ பாட்டில் என்ற ஒரு சாதனமும் இருக்கிறது

கோவா: தி பீபுள் என்ற மூன்றாவது மற்றும் கடைசி அறையில் கியாஸ்க் ஒன்று இருக்கிறது. இதன் பெயர் Once Upon A Time இந்த கியாஸ்க் என்பது பயாஸ்கோப் போன்றதொரு சாதனமாகும்.

இங்கு பார்வையாளர்கள் கோவாவின் வரலாற்றுக்கு முந்தைய கண்டுபிடிப்புகளை ஆராயலாம். பின்னர் மற்றொரு கியோஸ்க் கோவா 2035 உள்ளது, இது கோவாவின் கலாச்சார பார்வையை ஹாலோகிராப் மூலம் மக்கள் புரிந்துகொள்ள அனுமதிக்கிறது.

காலை 10.30 மணி முதல், மாலை 5 மணி வரை இந்த அருங்காட்சியகம் மக்கள் பார்வைக்கு திறந்திருக்கும்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?