ஒரு கிலோ காளான் 30,000 ரூபாயா? ’இமயத்தின் பொக்கிஷம்’ Gucchi காளானில் அப்படி என்ன சிறப்பு? canva
இந்தியா

ஒரு கிலோ காளான் 30,000 ரூபாயா? ’இமயத்தின் பொக்கிஷம்’ Gucchi காளானில் அப்படி என்ன சிறப்பு?

இமயமலையின் பொக்கிஷமாக கருதப்படும் இந்த காளானின் பெயர் குச்சி (gucchi). இமாச்சல பிரதேசத்தில் இமய மலைத்தொடரில் அமைந்திருக்கும் அடர்ந்த காடுகளில் தான் இந்த குச்சி காளான் வளர்கின்றன.

Keerthanaa R

உலகின் மிகவும் விலையுயர்ந்த காளான் இந்தியாவில், இமாச்சல பிரதேசத்தில் கிடைக்கிறது. இதன் விலை ஒரு கிலோ சுமார் 30,000 ரூபாய்.

அப்படி என்ன இருக்கிறது இந்த காளானில்? இதுவும் மற்ற காளான்களை போல நேற்று பெய்யும் மழையில் இன்று முளைப்பது தானே? என்றால், அதில் தான் இருக்கிறது விஷயமே!

காளான் அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு உணவு பண்டமாகும். குறிப்பாக சைவ உணவுப்பிரியர்கள் இதனை விரும்பி உண்கின்றனர்

இமயமலையின் பொக்கிஷமாக கருதப்படும் இந்த காளானின் பெயர் குச்சி (gucchi). இமாச்சல பிரதேசத்தில் இமய மலைத்தொடரில் அமைந்திருக்கும் அடர்ந்த காடுகளில் தான் இந்த குச்சி காளான் வளர்கின்றன.

அதுவும் இந்த பருவத்தில் வளரும் என்று குறிப்பிட்டு சொல்ல இயலாது. பனிப்பொழிவு ஏற்பட்டு அது உருகினால் தான் இந்த வகை காளான் வளர்கிறது. அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தினை இடி, மின்னல் தாக்கினால் அங்கு இந்த குச்சி காளான் வளர்கிறது.

இதனாலேயே இந்த காளான் அரிதிலும் அரிதாகவே வளர்கின்றன.

இமாச்சலத்தில் மணாலி, குலு, சம்பா, சிம்லா போன்ற பகுதிகளிலும், காஷ்மீரில் கங்கன், அனந்த்நாக், குப்வாரா போன்ற பகுதிகளிலும் இந்த குச்சி காளான்கள் வளரும்.

பார்ப்பதற்கு தேன் கூடு போன்ற வடிவத்தினை கொண்ட இந்த காளான்களை கண்டுபிடிக்க தனித் திறன் வேண்டும் என்கின்றனர் உள்ளூர்வாசிகள். இந்த வடிவத்தில் இருப்பது அனைத்துமே குச்சி காளான் ஆகிவிடாது என்று சொல்கின்றர்.

இத்தனை சிறப்பம்சங்களை கொண்டுள்ளதாலேயே ஒரு கிலோ குச்சி காளான் ரூ.10,000 முதல் ரூ.30,000 வரை விற்கப்படுகிறது.

இதனாலேயே பலரும் விவசாயம் செய்வதுடன் மட்டுமல்லாமல், இந்த காளான் பறிக்க காடுகளுக்கு செல்கின்றனர். காஷ்மீர் பகுதிகளில் அதிகாலையிலேயே காளான் பறிக்கும் பணி தொடங்கிவிடுகிறது.

இந்த காளானை மனிதர்களால் விளைவிக்க இயலாது என்பதும் குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?