பானி பூரி Twitter
இந்தியா

காது கேட்காது, வாய் பேச முடியாது; சொந்த காலில் நிற்கும் தம்பதி- நெகிழ வைக்கும் வீடியோ

Keerthanaa R

நாசிக் நகரில் காது கேளாத, வாய் பேச முடியாத தம்பதியின் பானி பூரி கடை தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

தங்கள் உடல்களில் ஏற்பட்டுள்ல குறையை சவலாக ஏற்றுக்கொண்டு வாழ்க்கையில் சாதித்தவர்கள் பலர். சமீபத்தில் வீல் சேரில் சென்று உணவு டெலிவரி செய்யும் ஒருவரின் கதை இணையத்தில் பெரிதும் பேசப்பட்டது.

அந்த வகையில், நாசிக்கில் ஒரு தம்பதியின் பானி பூரி கடை இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் ஸ்ட்ரீட் ஃபுட் ரெசிபி என்ற பயனரின் கணக்கில் வீடியோ ஒன்று பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் நாசிக்கில் அமைந்துள்ள பானி புர்ரி கடை பற்றிய விவரம் இருக்கிறது.

அந்த வீடியோவில் கணவன் மனைவி இருவரும் வாடிக்கையாளர்களுக்கு தங்களது கடையின் பானி பூரி குறித்து முற்றிலும் சைகையில் விளக்குகிறார்கள். அப்போது அந்த ஆண், தனக்கும் தன் மனைவிக்கும் காது கேளாது என்றும் வாய்ப் பேசமுடியாது என்றும் தெரிவிக்கிறார்.

மேலும் தங்களது கடையில் இருக்கும் பானி பூரி சுவையானதாகவும் சுகாதரமானதாகவும் இருக்கும் என்று விளக்குகிறார். இருவரும் இணைந்து அவர்கள் வீட்டிலேயே இவை அனைத்தையும் தயாரிப்பதாக அவர் சொன்னார். வரும் வாடிக்கையாளர்களிடம், அவர்களுக்கு என்ன வேண்டும் என்று சைகைகள் மூலமாகவே கேட்டு தயாரித்து கொடுக்கின்றனர் இந்த தம்பதி.

அந்த வீடியோவில், "இது உங்கள் மனதை நெகிழவைக்கும். காது கேளாத மற்றும் வாய்ப் பேச முடியாத தம்பதியினர், தங்களது குறையை நிறையாக மாற்றி, நாசிக்கில் ஒரு சிறிய பானி பூரி கடையை நடத்தி வருகிறார்கள். அவர்கள் பரிமாறும் அனைத்தும் அவர்களால், பூரிகள் உட்பட வீட்டில் தயாரிக்கப்படுகின்றன. உணவு பரிமாறும் போது அவர்கள் தூய்மையை எவ்வாறு பராமரிக்கிறார்கள் என்பதை நம்மால் காணமுடிகிறது. இவர்களை பார்த்து நம் தலைமுறை கற்று கொள்ள வேண்டிய நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

இடம் : ஜாத்ரா ஹோட்டல் அருகில், அட்கான் நாகா, நாசிக்."

இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து அதிக கவனத்தை பெற்று வருகிறது. அனைவரும் இந்த தம்பதிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தது மட்டும் அல்லாமல், இவர்களது நம்பிக்கை தங்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் தெரிவித்தனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

TwitterOnline Shopping

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?