கார்த்தி சிதம்பரம்: “ஹிஜாபை எதிர்க்கும் நீங்கள் சீக்கியர்கள் டர்பனில் கை வைக்க முடியுமா?”

 

NewsSense

இந்தியா

கார்த்தி சிதம்பரம்: “ஹிஜாபை எதிர்க்கும் நீங்கள் சீக்கியர்கள் டர்பனில் கை வைக்க முடியுமா?”

இந்தியா 1933ல் இருந்த ஜெர்மனி நாடு போல வேகமாக மாறிக்கொண்டு வருவதாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

Antony Ajay R

இந்தியா 1933ல் இருந்த ஜெர்மனி நாடு போல வேகமாக மாறிக்கொண்டு வருவதாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

ஹிஜாபிற்கு எதிர்ப்பு

ஹிஜாப் அணிய எதிர்ப்பு

இந்துத்துவா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் இஸ்லாமிய மாணவியர் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமிய மாணவியர் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வருவதற்கு கர்நாடகாவில் உள்ள பல்வேறு பியுசி கல்லூரிகளில் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய பள்ளி நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இதன் காரணமாக கர்நாடகாவில் உடுப்பி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இஸ்லாமிய மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து நாடாளுமன்றத்தில் தர்மபுரி எம்.பி. டி.என்.வி. செந்தில்குமார் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த சூழலில், காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரமும் இது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.

போராட்டம்

ஹிஜாப் அணிந்தால் வகுப்பிற்குள் விட முடியாது என்று பள்ளி மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

முதலில் மங்களூரில் தொடங்கிய இந்த தடை பின்னர் உடுப்பியில் பல்வேறு பியுசி கல்லூரிகளில் பரவியது.

அதன்பின் சிக் மங்களூர், சிவமொக்கா போன்ற பகுதிகளுக்கும் பரவியது. இதனால் அங்கு பியுசி கல்லூரிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இஸ்லாமிய அமைப்புகள் மட்டும் அல்லாது ஜனநாயகவாதிகளும் அங்கு போராடி வருகின்றனர்.

கார்த்திக் சிதம்பரம்

இப்படியான சூழலில் ஹிஜாப் தடைக்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், “ஹிஜாப்பை தடை செய்வது என்பது மாணவியரின் உடையை சீர்படுத்துவதற்காக அல்ல. அதை சாக்காக வைத்து, உங்களை நாங்கள் குறி வைத்துக்கொண்டு இருக்கிறோம் என்று இஸ்லாமை பின்பற்றும் மக்களுக்கு எதிராக வெளிப்படையாக எச்சரிக்கை விடுகின்றனர்.

இஸ்லாமியர்களை எதிர்க்கும் இவர்களால்.. அதே எதிர்ப்பை வகுப்பிற்கு டர்பன் அணிந்து வரும் சீக்கியருக்கு எதிராக செய்ய முடியுமா?,” என கேள்வி எழுப்பி உள்ளார்.

Hitler

நாஜிக்களுடன் ஒப்பீடு

மேலும் அவர் இந்தியாவை பழைய நாஜி ஜெர்மனியோடு ஒப்பிட்டு இருக்கிறார்.

1933ல் ஜெர்மனி ஹிட்லரின் நாஜி கட்டுப்பாட்டில் இருந்த போது அங்கு யூதர்களுக்கு எதிராக இதே போன்ற கொடுமைகள் அரங்கேற்றப்பட்டன என குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமாக யூதர்களுக்கு எதிராக நாஜிகள் தங்கள் கைகளில் Swastika முத்திரை கொண்ட பேண்ட்களை அணிந்து இருந்தனர். பல கல்வி நிறுவனங்களில் யூதர்களை உள்ளே விடாமல் நாஜிக்கள் தடுத்து நிறுத்தினர். கொஞ்சம் கொஞ்சமாக பரப்பப்பட்ட வெறுப்பு பிரச்சாரம் பின்னர் holocaust படுகொலையில் சென்று முடிந்தது. இந்த நிலையில் holocaust படுகொலைக்கு முன் தொடக்க கால ஜெர்மனியில் நடந்த சம்பவங்களுக்கு இணையாக இந்தியாவில் நடந்து வருவதாக கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?