பொற்கோவிலுக்குச் சென்ற ராகுல்காந்தியை புளூ ஸ்டாரைக் குறிப்பிட்டு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா விமர்சனம் செய்திருக்கிறார்.
காந்தி ஜெயந்தி நேற்று நாடு முழுவது கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சென்று பிரார்த்தனை செய்தார்.
பக்தர்களுக்கு உணவு தயாரித்து வழங்கும் உணவு கூடத்தில் பாத்திரங்களை சுத்தப்படுத்தி சேவையில் ஈடுபட்டார் ராகுல்காந்தி. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியானது.
இதுகுறித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா, X பக்கத்தில் "பஞ்சாப் மாநிலத்துக்கு அரசியல் பயணமாக ராகுல் காந்தி வரவில்லை, தனிப்பட்ட முறையில் வந்திருக்கிறார், ஆன்மிக பயணமாக வந்துள்ளார். பொற்கோயிலில் பிரார்த்தனை செய்த அவரின் தனிப்பட்ட விவகாரங்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.
இந்தநிலையில் அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, பொற்கோவிலுக்குச் சென்ற ராகுல்காந்தியை புளூ ஸ்டாரைக் குறிப்பிட்டு விமர்சனம் செய்திருக்கிறார்.
அவரது பாட்டி பொற்கோயிலை குண்டுகளால் துளைக்க ஆணையிட்டார். பேரக்குழந்தை இங்கு சேவை செய்கிறார் என விமர்சித்திருந்தார். ' ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்' குறிப்பிட்டு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா விமர்சனம் செய்திருக்கிறார்.
புளூஸ்டார் என்பது சூன் 3-6, 1984-ல் நடைபெற்ற இந்திய ராணுவத்தின் நடவடிக்கை ஆகும். அம்ரித்சர் நகரின் பொற்கோயிலில் தஞ்சம் புகுந்த பிரிவினைவாத சீக்கியர்களை பிடிக்கும் பொருட்டு, அப்போதைய இந்தியப் பிரதமரான இந்திரா காந்தியின் ஆணைப்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சீக்கியர்கள் பல்வேறு கோரிக்கைகளுடன் பொற்கோவிலை முற்றுகையிட்டதாகவும் காலிஸ்தான் இயக்கத்தின் தலைவர் ஜர்னையில் சிங் பிந்தரன்வாலாவால் தலைமை தாங்கப்பட்ட பிரிவினைவாதிகள் நிறைய ஆயுதங்களை சீக்கியக் கோவிலில் சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். இதனால் இந்திய ராணுவத்தால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இந்த ராணுவ நடவடிக்கை உலகம் முழுவதிலுமுள்ள சீக்கியர்களிடையே பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவில் ஏற்பட்ட பதட்ட நிலையால் சீக்கியர் மேல் பல இடங்களில் தாக்குதலும் நடைபெற்றது. இன்று வெளிநாடுகளில் இருக்கும் பிரிவினைவாத சீக்கியர்கள் பஞ்சாப் சில பகுதிகளை காலிஸ்தான் நாடாக உருவாக்க பிரசாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust