வாழ்க்கையில் சாதிக்க அதிக மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை பலர் நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் பெற்றிருக்கும் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தாலும் வாழ்வில் சாதிக்க முடியும் என ஊக்கப்படுத்தும் வகையில் தனது 10ம் வகுப்பு மார்க் ஷீட்டை வெளியிட்டிருக்கிறார் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்.
இப்போது சத்தீஸ்கரில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றும் அவர் கணிதத்தில் 31 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். அத்துடன் வேதியலில் 18 மட்டுமே எடுத்திருக்கிறார்.
அவர் படித்த பாடத்திட்டத்தில் கணிதத்தில் பாஸ் மார்க் 30 மற்றும் வேதியலில் 15 என்பது குறிப்பிடத்தக்கது.
1996ம் ஆண்டு 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலான அதில் அவர் பெயர் AVANISH KUMAR SHARAN என இருந்தது. 700 மதிப்பெண்களுக்கான தேர்வில் அவர் 314 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். அது வெறும் 44.85 விழுக்காடு மட்டுமே.
உண்மையில் இந்த மதிப்பெண்களை பெற்ற மாணவர் வருங்காலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக இருப்பார் என்றால் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள்.
அவரது இந்த ட்விட்டுக்கு 32,700க்கும் மேலான லைக்குகள் குவிந்து வருகிறது.
"ஒருவர் ஐஏஎஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்றால் அவர் பிறந்ததில் இருந்தே அப்படியிருந்திருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. 10 வகுப்பில் ஜஸ்ட் பாஸ் ஆனால் கூட கடுமையான உழைப்பும் தியாகமும் நம்மை ஐஏஎஸ் ஆக்கிவிடும்" என அவரது ட்விட் கூறுவதாக பயனர் ஒருவர் கமென்ட் செய்திருந்தார்.
இந்த ட்விட் பல இளைஞர்களை ஊக்குவிக்கும் என மற்றொருவர் கூறியிருந்தார்.
முன்னதாக துஷார் டி சுமேரா என்னும் அதிகாரிடின் மார்க் ஷீட் வெளியானது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust