Idly Canva
இந்தியா

இட்லி ATM : 24 மணி நேரமும் சூடான இட்லி- இணையவாசிகளை கவர்ந்த இட்லி பாட்| Viral Video

அந்த வகையில், சூடான இட்லி, சட்னி, சாம்பார் வினியோகிக்கும் ஏடிஎம் ஒன்றின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Keerthanaa R

பெங்களூரில் வைக்கப்பட்டுள்ள இட்லி ஏடிஎம் இணையவாசிகளின் கவனத்தை பெற்று வருகிறது.

நம் அலுவலகங்களில் ஸ்நாக்ஸ், கூல் டிரிங்க்ஸ் போன்றவற்றைக் கொடுக்கும் வெண்டர் மெஷின்களைப் பார்த்திருப்போம். சமீபத்தில் துபாய் அதிபர் கூட, தங்கள் நாட்டில் உணவின்றி பசியோடு யாரும் உறங்கக்கூடாது எனக் கூறி ரொட்டிகளை தயாரித்துக் கொடுக்கும் இயந்திரம் ஒன்றை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியிருந்தார்.

இட்லி ஏடிஎம்

தென்னிந்திய உணவு வகைகளில் தவிர்க்க முடியா உணவு இட்லி. மேலும், இட்லி அதிக ரசிகர்களை கொண்ட உணவும் கூட. அந்த வகையில், சூடான இட்லி, சட்னி, சாம்பார் வினியோகிக்கும் ஏடிஎம் ஒன்றின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புதிய வகை உணவு ஏடிஎம் பெங்களூரில் வைக்கப்பட்டுள்ளது. நாம் வழக்கமாக சென்று பணம் எடுக்கும் ஏடிஎம் போலவே குளிர்சாதன அறையில் இந்த ஏடிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

எப்படி ஆர்டர் செய்வது?

இந்த இயந்திரங்களுக்கு அருகில் QR Code வைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் அந்த கோடை ஸ்கேன் செய்ய வேண்டும். பின்னர் தங்கள் விரும்பும் வகை இட்லியை அதில் பதிவேற்றி ஆர்டர் செய்யவேண்டும். இட்லி, சாம்பார், சட்னி, மற்றும் இட்லி மிளகாய் பொடி ஆகியவையுடன் இந்த இயந்திரத்தில் இட்லி பெற்றுக்கொள்ளலாம்.

ஆர்டர் செய்த பின்னர் மொபைலுக்கு ஒரு கோட் வரும், அதை இந்த இட்லி ஏடிஎம் இல் மீண்டும் ஸ்கேன் செய்தால், இயந்திரம் நமக்கு இட்லியை தயாரித்து கொடுக்கும். 12 நிமிடங்களில் 72 இட்லிகள் வரை இந்த இயந்திரத்தால் வினியோகிக்க முடியும்.

இந்த இட்லி ஏடிஎம் இயந்திரத்தை ஃப்ரெஷொட் ஃபுட்பாட்ஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

2016ல் தோன்றிய ஐடியா:

ஹிரேமத் என்ற கணினி பொறியாளர் ஒருவர், இந்த யோசனை தனக்கு 2016ல் தோன்றியது எனக் கூறினார். அப்போது அவரது மகளுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகவும், அப்போது இரவு நேரம் என்பதால் சூடான இட்லி கிடைக்காமல் அவர் அவதிப்பட்டதாகவும் தெரிவித்தார். "எல்லா நேரங்களிலும் சூடான உணவு கிடைக்க ஒரே வழி, ஒரு தானியங்கி இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே என எனக்கு தோன்றியது" என்று டெக்கன் ஹெரால்ட் பத்திரிக்கையிடம் அவர் தெரிவித்திருந்தார்.

முதல் தென்னிந்திய உணவு வினியோக இயந்திரம்:

முதலில் இந்த இயந்திரத்திற்காக சில முன்மாதிரிகள் செய்யப்பட்டது. பின்னர் இட்லி தயாரிக்கு மாவின் தன்மை உட்பட இயக்க நடைமுறைகளில் வேலை செய்ய வேண்டியிருந்தது. தற்போது முழுவதும் தயாராகியுள்ள இந்த இயந்திரம், 24 மணி நேரமும் சூடான இட்லிகளை வழங்கும்.

தென்னிந்திய காலை உணவுக்கான முதல் முழுமையான தானியங்கி சமையல் மற்றும் வினியோக இயந்திரம் இந்த இட்லி பாட் தான் என்று கூறப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?