manipur : பெண்களால் மட்டுமே இயங்கும் 500 வருட பழைய சந்தை - பாரம்பரியத்தின் பின்னணி என்ன? டிவிட்டர்
இந்தியா

Manipur : பெண்களால் இயக்கப்படும் 500 வருட பழைய சந்தை - பாரம்பரியத்தின் பின்னணி என்ன?

வரலாறு நெடுக ஆணாதிக்கம் ஓங்கியிருக்கும் சூழலில் பெண்களுக்கான இந்த சந்தை 500 ஆண்டுகளுக்கு முன்னரே உருவானது எப்படி? மக்களின் கலாச்சாரத்தில் இந்த சந்தையின் பங்கு என்ன? உலகின் மிகப்பெரிய பெண்கள் சந்தையாக அறியப்படும் இதன் ரகசியங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

Antony Ajay R

மணிப்பூரின் தலைநகரான இம்பால் மாவட்டத்தில் உள்ளது இந்த பெண்கள் சந்தை. இங்கு வியாபாரம் செய்யும் அனைவரும் பெண்கள் மட்டும் தான். வரலாறு நெடுக ஆணாதிக்கம் ஓங்கியிருக்கும் சூழலில் பெண்களுக்கான இந்த சந்தை 500 ஆண்டுகளுக்கு முன்னரே உருவானது எப்படி? மக்களின் கலாச்சாரத்தில் இந்த சந்தையின் பங்கு என்ன? உலகின் மிகப்பெரிய பெண்கள் சந்தையாக அறியப்படும் இதன் ரகசியங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

எமா கெய்தல், அம்மாக்களின் சந்தை அல்லது நுபி கெய்தல் என்ற பெயர்களால் இந்த சந்தை அழைக்கப்படுகிறது. தொலைப்பேசி, வாட்ஸ் அப் எல்லாம் வருவதற்கு முன்னர் ஊரெல்லாம் ஒரு தகவலைப் பரப்ப இந்த சந்தை தான் வழி. அந்த அளவு மக்கள் புழக்கம் மிகுந்த இடமாக இருந்தது. கல்வி சார்ந்த விஷயங்களும் இங்கு அரங்கேரின. பெண்கள் ஆளும் இந்த மார்கெட் தான் இப்போதும் ஊரில் முக்கியமான முடிவுகளை எடுக்கின்றன. மணிப்பூரை இந்தியாவின் நகை என்று ஜவர்ஹலால் நேரு கூறியதற்கு இது போன்ற மாறுபட்ட கலாச்சாரமே காரணமாக இருக்க வேண்டும்!

எப்படி உருவானது?

கி.பி 1074 முதல் 1112 வரை இம்பாலை ஆண்ட மன்னர் லொயும்பா. இவர் கட்டாய வேலை அல்லது 'லல்லுப் கபா' என்ற முறையை அறிமுகப்படுத்தினார். இதன் படி ஆண்கள் அனைவருமே ஊருக்கு வெளியில் சென்று கட்டாயமாக வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.

வீட்டிலிருந்து ஆண்கள் சென்றுவிட்டதனால் குடும்பங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டன. இதனால் பெண்கள் தாம் செய்யும் கைவினைப் பொருட்களையும், உணவுப் பொருட்களையும் விற்பனை செய்வதற்காக உருவாக்கியது தான் இந்த எமா கெய்தல். இந்த அம்மாக்களின் சந்தை நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தியது.

பெண்களின் உரிமை

இந்த சந்தையில் எமா சந்தை (47,834 ச.அ) , புதிய சந்தை (30.074 ச.அ), லக்ஷமி சந்தை (20,333 ச.அ) என மூன்று கட்டிடங்கள் உள்ளன.

இந்த சந்தையிலிருந்து பல பெண்ணுரிமை இயக்கங்கள் பிறந்திருப்பதாக மணிப்பூர் பல்கலைகழகத்தின் முனைவர் ஹோபம் பிலாஷினி தேவி டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் கூறியிருக்கிறார்.

அவர் மற்றொரு சம்பவத்தையும் நினைவுபடுத்துகிறார். 1901ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு வெண்கல நாணயத்தை அறிமுகப்படுத்தியது. பல நாணயங்கள் அச்சிடப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் சந்தையில் பெண்கள் அந்த நாணயங்களை வாங்க மறுத்துவிட்டனர். இதனால் மீண்டும் மணிப்பூர் நாணயமே பயன்படுத்தப்பட்டது. இவ்வாறாக பெண்களுக்கு தீர்மானிக்கும் சக்தியிருந்தது என்கிறார் அவர்.

சந்தையின் சிறப்பு அம்சங்கள்

இந்த சந்தையில் ஆண்கள் கடை வைக்கவோ, நடத்தவோ அனுமதியில்லை. பெண்களே முதலாளிகள். ஆண்கள் சுமைதூக்கும் வேலையில் ஈடுபட அனுமதிக்கப்படுகின்றனர். பொருட்கள் வாங்க ஆண்கள் வருவது வழக்கம்.

இங்கு கடை வைத்திருக்கும் பெண்கள் ஒரே மாதிரியான பொருட்களை தான் விற்பனை செய்ய வேண்டும். கைவினைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் கடையில் கைவினைப் பொருட்கள் மட்டுமே இருக்கும். ஆடை விற்பவர்கள் கடையில் ஆடைகள் மட்டுமே இருக்கும்.

இங்கு விற்பனை செய்யப்படும் பெரும்பாலான பொருட்கள் வீட்டிலேயே தயாரிக்கப்படுபவை தான். அவற்றை தயாரிக்க பெண்களின் குடும்பத்தினரும் உதவுகின்றனர். சந்தையினுள் 5000 பெண்கள் கடை வைத்துள்ளனர். இவர்கள் அனைவரும் அதற்கான உரிமை அட்டையும் வைத்திருக்கிறார்கள். சந்தைக்கு வெளியே உரிமை இல்லாத 1000 பெண்கள் கடை வைத்திருக்கின்றனர்.

உரிமை அட்டைகளை வைத்திருக்கும் பெண்கள் தங்கள் குடும்பத்தில் அடுத்த தலைமுறை பெண்களான மகள்களுக்கோ மருமகள்களுக்கோ அதனைக் கொடுக்கின்றனர்.

இந்த சந்தையில் வியாபாரம் சரியில்லாமல் போகும் போது உள் சந்தையிலேயே கடன் வழங்கப்படுகிறது. இதனை தினசரி சந்தாவாகவோ, வார சந்தாவாகவோ அல்லது மாத சந்தாவாகவோ திருப்பிக்கொடுக்கின்றனர்.

இந்த கடைகளின் வருமானத்தை நம்பியே பெரும்பாலான குடும்பங்களும் இருக்கின்றன. சாதாரண நாட்களில் 2000 ரூபாய் வரை சம்பாதிக்கும் இந்த பெண்கள் திருமண காலங்களில் 6000 - 10000 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர்.

இந்த சந்தையில் இருக்கும் கடைகள் குடும்பத்திலும், சமூகத்திலும் பெண்களின் அந்தஸ்தை உயர்த்துகின்றன. மணிப்பூர் செல்லும் சுற்றுலாப் பயணிகளும் இந்த சந்தையை வியந்து பார்வையிடுகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?