Doodle  Twitter
இந்தியா

சுதந்திர தினம் : Google வெளியிட்ட சிறப்பு Doodle சொல்லும் செய்தி என்ன?

Antony Ajay R

இந்தியா சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதை கொண்டாட சிறப்பான வண்ணமயமான டூடுல் வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம்.

ஆண்களும் பெண்களும் பட்டம் விட்டு விளையாடுவது போல அந்த டூடுல் அமைந்துள்ளது. பட்டம் விடுபவர்களுக்கு ஒரு பெண் பட்டத்தை தயார் செய்து கொடுப்பதும் அழகாக இடம் பெற்றிருக்கிறது. இதனை கேரளாவைச் சேர்ந்த நீத்தி என்ற கலைஞர் உருவாக்கியிருக்கிறார்.

இந்தியாவின் காத்தாடி கலாச்சாரத்தை குறிக்கும் விதமாக இந்த டூடுலில் பட்டம் காட்டப்படுகிறது. இந்திய சமூகங்கள் ஒன்றிணைவதைக் குறிக்கும் விதமாக பல வண்ண காத்தாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த காத்தாடிகள் போல நம் தேசமும் உயர உயர பறக்க வேண்டும் என்பது தான் இந்த டூடுல் நமக்குக் கூறும் செய்தியாக இருக்கிறது.

இது குறித்து நீத்தி, "காத்தாடிகள் கலை வெளிபாட்டின் அடையாளம். இவை தற்கால ட்ரெண்டை குறிக்க அல்லது சமுக கருத்துக்களை கொண்டுள்ளன. இந்த காத்தாடிகள் நம் தேசத்தின் நிறங்களில் வரையப்பட்டிருக்கின்றன. இவர் அன்பின் செய்திகளை வெளிப்படுத்துவதுடன் 75 ஆண்டுகள் சுதந்திரத்தை நினைவு கூறுகின்றன." என்று கூறியிருக்கிறார்.

மேலும், "காத்தாடிகள் வானளாவிய கட்டங்கள், பறவைகளைப் போல மேலே பறக்கின்றன." என்று கூறினார்.

காத்தாடிகள் கொண்டாட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அசையும் GIF -ஆக உருவாகியிருக்கும் இந்த டூடுல் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?