ரேணுகா சிங் - ஸ்ம்ரிதி ட்விட்டர்
இந்தியா

Asia Cup 2022: தொடரும் ஆதிக்கம்...7வது கோப்பையை கைப்பற்றி கோலோச்சி நிற்கும் இந்திய அணி

Keerthanaa R

இலங்கைக்கு எதிரான ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி. இது இந்திய அணியின் ஏழாவது கோப்பை

கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி மகளிர் கிரிக்கெட்டுக்கான ஆசியக் கோப்பை போட்டிகள் தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, வங்கதேசம், மலேசியா, யுஏஇ ஆகிய நாடுகள் இந்த தொடரில் பங்கேற்றன.

இந்தியா பாகிஸ்தான் அணிகள் குரூப் ஸ்டேஜ் போட்டிகளின் முடிவில் முன்னிலையில் இருந்தன. பின்னர் தாய்லாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மறுபுறம், பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்தது. ஆனால், இந்திய அணியின் பவுலிங்கிற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிய இலங்கை வீரங்கனைகள், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 65 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு டஃப் கொடுத்தனர் இலங்கை பவுலர்கள். 4 மற்றும் 5வது ஓவர்களில் அடுத்தடுத்து இரு விக்கெட்களை பறிக்கொடுத்த இந்தியாவுக்கு துணை நின்றார் துவக்க வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தன்னா.

25 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்ம்ரிதி, இந்தியாவின் வெற்றிக்கு வழி வகுத்தார். 6 ஃபோர், 3 சிக்சர்களை விளாசியிருந்தார் ஸ்ம்ரிதி. இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 11 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியாவின் சார்பாக ரேணுகா சிங் மூன்று விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆசியக் கோப்பையில் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. இதுவரை நடந்த 8 சீசன்களில், 7 முறைக் கோப்பையை வென்றுள்ளது இந்தியா. மீதமுள்ள ஒரு சீசனிலும் இறுதிப்போட்டியில் தான் தோற்றது அணி.

முன்னாள் மகளிர் வீராங்கனைகள், இந்திய ஆடவர் அணி வீரர்கள் என எல்லா தரப்பிலிருந்தும் இந்திய அணிக்கு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?