Indian Railways: இந்தியாவின் மிக முக்கியமான ரயில்கள் என்னென்ன? canva (rep)
இந்தியா

Indian Railways: இந்தியாவின் மிக முக்கியமான ரயில்கள் என்னென்ன?

Keerthanaa R

இந்தியாவில் மக்களை ஏற்றிச்செல்லும் பயணிகள் ரயில், பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில் என இரண்டும் இருப்பது நமக்கு தெரியும். இந்திய ரயில்வே ஒரு நாளைக்கு குறைந்தது 13,000 ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் சிலவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும், ஏனெறால் அவை ஏதாவது சிறப்பு காரணக்களுக்காக இயக்கப்படுபவையாக இருக்கும்.

ARME, வி வி ஐ பி ரயில்கள், புறநகர் ரயில்கள், அதிவிரைவு ரயில்கள், மெயில் அல்லது எக்ஸ்பிரஸ் ரயில்கள், சிறப்பு ராணுவ ரயில்களை இந்த பட்டியலில் சேர்க்கலாம்.

இந்த ரயில்கள், சாதாரண பயணிகள் ரயில் வரும் பாதையில் வருவது தெரிந்தால், பயணிகள் ரயில் நிறுத்திவைக்கப்படும். இந்த சிறப்பு ரயில்கள் கடந்து சென்ற பிறகே, நாம் பயணிக்கும் ரயில்களை மீண்டும் தடம் மாற்றி இயக்குவார்கள்.

சிறப்பு ராணுவ ரயில்

இது ராணுவ வீரர்களுக்கான சிறப்பு ரயில். ராணுவ வீரர்கள் பயணிக்க, பயிற்சி முடிந்து எல்லைக்கு அழைத்துச் செல்ல இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் இயக்கத்தில் இருந்தால், தேவையை பொறுத்து மற்ற ரயில்கள் நிறுத்திவைக்கப்படும்.

சூப்பர்ஃபாஸ்ட் ரயில்கள்

பொதுவாகவே சூப்பர்ஃபாஸ்ட் ரயில்களுக்கு முக்கியத்துவம் இருக்கிறது என்றால், அவற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்தவை உள்ளன. அதிவிரைவு ரயில்களில் வைத்து ராஜ்தானி ரயில்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இவற்றிற்கு பிறகே சதாப்தி, தேஜாஸ், துரந்தோ போன்ற ரயில்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரயில்கள்

நாட்டின் ஒரு பகுதியை மற்றொன்றுடன் இணைக்கும் நீண்ட தூர ரயில்களான இவற்றின் பாதை மற்றும் நேரம் ஆகியவை ஒன்றாக இருக்கின்றன. அதிவிரைவு ரயில்களுக்கு அடுத்தபடியாக இந்த ரயில்கள் உள்ளன

புறநகர் ரயில்கள்

சென்னை, மும்பை போன்ற நகரங்களில் அத்தியாவசிய தேவையாக இருக்கின்றன இந்த ரயில்கள். மிகவும் முக்கியமான நேரங்களில், அதாவது பீக் ஹவர்களில், மற்ற ரயில்கள் நிறுத்திவைக்கப்பட்டு, புறநகர் ரயில்கள் இயக்கப்படும்.

விவிஐபி அல்லது ஜனாதிபதி ரயில்கள்

இந்திய ஜனாதிபதி அல்லது முக்கியமான விவிஐபிகளை அழைத்து செல்கிறது இந்த ரயில்கள். ராஜ்தானி ரயில்களை விடவும் முக்கியத்துவம் பெற்றவை.

ARME ரயில்கள்

இவை விபத்து நிவாரண உபகரணங்களை எடுத்துச்செல்லும் ரயில்கள். அவசர காலத்திலோ, விபத்திற்கு பிறகோ இயக்கப்படும் இந்த ரயில்கள் அதிக முக்கியத்துவம் பெற்றவை. இந்த ARME ரயில்கள் இயக்கப்படும்போது மற்ற ரயில்கள் அந்த பாதையில் இருந்தால் அவை நிறுத்திவைக்கப்படும்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?