இந்திய போலீஸின் துப்பறியும் நாய்கள் : நம்மை காக்கும் 8 உளவாளிகள்  NewsSense
இந்தியா

இந்திய போலீஸின் துப்பறியும் நாய்கள் : நம்மை காக்கும் 8 உளவாளிகள்

NewsSense Editorial Team

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 11 ஆம் தேதி தேசிய செல்லப் பிராணிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த செல்லப் பிராணிகள்தான் நமது வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறது. மக்களுக்கும் செல்லப் பிராணிகளுக்கும் இடையிலான பிணைப்பை இந்த தினம் போற்றுகிறது. ஒரு செல்லப் பிராணி என்பது ஆழ்ந்த இருளிலிருந்து உங்களை வெளியே கொண்டு வந்து, பார்க்கும் போதெல்லாம் உங்களைப் புன்னகைக்கவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும் ஜீவனாகும்.

நாய்கள் உலகம் முழுவதும் மிகவும் விசுவாசமான செல்லப்பிராணிகளில் ஒன்றாகும். ஆனால் அவைகள் விசுவாசமானவை மட்டுமல்ல. பல சந்தர்ப்பங்களில் மக்களின் உயிரை இந்த நாய்கள் சில காப்பாற்றியுள்ளன. இதன் காரணமாக, பல போலீஸ் அகாடமிகள் நாய்களுக்குப் பயிற்சி அளித்து, வெடிகுண்டுகளைக் கண்டுபிடிப்பது, குற்றவாளிகளைத் துரத்துவது, இறந்த உடல்களைக் கண்டுபிடிப்பது போன்ற பல வழக்குகளில் அவைகளின் உதவியைப் பெறுகின்றன.

மிகுந்த துணிச்சலை வெளிப்படுத்திப் பெயரெடுத்த இந்த புகழ் பெற்ற போலீஸ் நாய்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

சன்ஜீர்

சன்ஜீர் ஒரு லாப்ரடார் ரெட்ரீவர் இனத்தைச் சேர்ந்த நாயாகும். அது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை காவல் துறையில் துப்பு துலக்கும் நாயாக பணியாற்றியது. குறிப்பாக 1993 மும்பை குண்டு வெடிப்பின் போது பல வெடிபொருட்கள் மற்றும் பிற ஆயுதங்களைக் கண்டறிந்த அதன் சேவையின் காரணமாக, சன்ஜீர் இறந்த போது முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது.

இந்தியாவின் புனேவில் உள்ள சிவாஜி நகரில் உள்ள குற்றப் புலனாய்வுத் துறையின் நாய் பயிற்சி மையத்தில் சன்ஜீர் பயிற்சி பெற்றது. அது 29 டிசம்பர் 1992 இல் மும்பை போலீஸ் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கப் பிரிவில் சேர்க்கப்பட்டது. இந்த நாயை கணேஷ் ஆண்டலே மற்றும் வி ஜி ராஜ்புத் ஆகியோர் கையாண்டனர்.

சன்ஜீருக்கு எலும்பு புற்றுநோய் உருவானதால் அதன் விளைவாக நவம்பர் 16, 2000 இல் இறந்து போனது.

பொதுவில் ஹீரோக்கள் என்றால் மனிதர்கள் மட்டும் என்று நினைக்கிறோம்.

1993 மும்பை குண்டுவெடிப்பின் போது 3350 கிலோ ஆர்டிஎக்ஸ், 600 டெட்டனேட்டர்கள், 250 கையெறி குண்டுகள் மற்றும் 6500 ரவுண்டு தோட்டாக்கள் ஆகியவற்றைக் கண்டறிந்து 1000 உயிர்களைக் காப்பாற்றிய நாய்தான் சன்ஜீர். அந்த வகையில் இந்த நாயும் ஒரு உண்மையான ஹீரோ!

டைகர்

மாநில காவல்துறை மற்றும் நாடு முழுவதும் உள்ள துணை ராணுவப் படைகளுக்கு நாய்க்குட்டிகளை வழங்கும் அரசு நிறுவனம்தான் கேனைன் கிளப் ஆஃப் இந்தியா. டைகர் 11 மாத குழந்தையாக இருந்தபோது, 2003 ஆம் ஆண்டு உ.பி காவல்துறைக்கு டைகரை மேற்கண்ட நிறுவனம் வழங்கியது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள தேகன்பூரில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையின் மதிப்புமிக்க தேசிய நாய்களுக்கான பயிற்சி மையத்தில் கண்காணிப்பு, வெடிபொருள் கண்டறிதல், போதைப்பொருள் கண்டறிதல், தேடுதல் மற்றும் மீட்பு மற்றும் பாதுகாவலர் பயிற்சி உள்ளிட்ட 36 வார பயிற்சி முகாமில் டைகர் பயிற்சி பெற்றது.

சிறு கால்வாயின் ஆழத்தில் குழந்தையின் உடலைக் கண்டறிவது, அடர்ந்த காட்டில் குற்றவாளிகளைக் கண்டறிவது போன்ற பல வழக்குகளில் இந்த டைகர் காவல்துறைக்கு உதவியது. அதன் கடின உழைப்பு மற்றும் திறமையால் அதற்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதவிக்கு இணையான பதவி வழங்கப்பட்டது. இது ஒரு போலீஸ் நாய்க்கு இருக்கக் கூடிய மிக உயர்ந்த பதவியாகும்.

இறக்கும் போது டைகருக்கு தேசியக் கொடி போர்த்தப்பட்டு பாரம்பரிய மரியாதை அளிக்கப்பட்டது.

தேங்கா

தேங்கா ஒரு மோங்கல் வகைப்பட்ட இனத்தைச் சேர்ந்த நாயாகும். வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்களைக் கண்டறியவும், காணாமல் போனவர்களைக் கண்காணிக்கவும் காவல்துறைக்கு உதவ உத்தராகண்ட் அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக முதலில் நியமிக்கப்பட்டது.

மற்ற நாய்கள் தேர்ச்சி பெற பல மாதங்கள் எடுத்தன என்றால் தேங்கா அதை 20 நாட்களில் கற்றுக் கொண்டது. இதனால் தேங்கா உடன் கண்காணிப்பு பணிக்கு பொறுப்பேற்றது. தேங்காவின் பயிற்சிக்குப் பிறகு, காணாமல் போனவர்களைக் கண்காணிப்பதோடு, பேரிடர் சூழ்நிலைகளில் மக்களைக் காப்பாற்றவும் அது பணிபுரிகிறது. தேங்காவின் பயிற்சியாளர்கள் அதனுடன் பணிக்குச் செல்ல வேண்டும்!

அனு

இந்த பெண் நாய் 2002ஆம் ஆண்டில் உள்ளூர் நாய் வளர்ப்பாளிடமிருந்து ரூ.5,000த்திற்கு வாங்கப்பட்டது. அப்போது அனுவிற்கு வயது ஏழு மாதங்கள்தான். அது பொதுவில் மிகவும் நட்பான நாயாக கருதப்பட்டது. அனுவின் கூர்மையான வாசனை உணர்வுகள் பல கடுமையான குற்றவாளிகளைப் பிடிக்க உதவியது மற்றும் நகரத்தில் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்தியது.

வடக்கு தில்லியில் உள்ள மாடல் டவுனில் உள்ள நகரின் நாய்ப் படையின் தலைமைப் பிரிவிலிருந்த ஒரே பெண் டாபர்மேன் அனுதான். மேலும் அங்கே 14 லாப்ரடோர் நாய்கள் இருந்தன. மேலும் பல நாய்களுக்கு அவற்றின் தூண்டுதலுக்கு முன் பயிற்சி அளிப்பதில் அனு உதவியுள்ளது. அனு இளமையாக இருந்தபோது பல நாய் கண்காட்சிகளில் நட்சத்திரமாக ஜொலித்தது.மேலும் அனுவின் புத்திசாலித்தனம் மற்றும் சுறுசுறுப்புக்காகப் பல விருதுகளை வென்றுள்ளது.

ஜாக்

புனே போலீஸ் படையின் K9 அணியின் முழுப் பயிற்சி பெற்ற ஒன்பது உறுப்பினர்களில் ஜாக் எனும் நாயும் ஒன்று. இந்த படையில் உள்ள நாய்கள் பல வழக்குகளைத் தீர்க்க காவல்துறையினருக்கு உதவுகிறார்கள். ஜாக் ஒரு டோபர்மேன் வகையைச் சேர்ந்த நாய் ஆகும். சக்கன் கொலை வழக்கில் கொலையாளியின் இருப்பிடத்தைக் கண்டறிய ஜாக் உதவியது.

பலாத்காரம் மற்றும் கொலைக்காக தேடப்பட்ட ஒரு நபர் ஜாக் உதவியுடன் பாதிக்கப்பட்டவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு முதல் ஐந்து மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?