Air Pollution Twitter
இந்தியா

நம் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் குறையும் - ஏன் தெரியுமா?

காற்று மாசு காரணமாக இந்தியர்களின் ஆயுட்காலம், குறிப்பாக கங்கை சமவெளிப்பகுதியில் வாழக்கூடிய மக்களின் ஆயுட்காலம் குறையும் என சிகாகோ பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Antony Ajay R

அமெரிக்காவிலுள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஏர் குவாலிட்டி லைஃப் இன்டெக் (AQLI) என்ற அமைப்பு உலகம் முழுவதும் காற்று மாசுவினால் ஏற்படும் தாக்கத்தையும் அதனால் மனித வாழ்வுக்கு ஏற்படும் நெருக்கடிகளையும், அபாயங்களையும் கணக்கிட்டு வருகிறது.

சமீபத்தில் அந்த அமைப்பு நடத்திய ஆய்வு காற்று மாசு காரணமாக இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 5 ஆண்டுகள் வரை குறையும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இப்போது இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 69.66 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே மிக மோசமானக் காற்று மாசுவால் பாதிக்கப்பட்ட பகுதியாகக் கங்கை சமவெளிப்பகுதி இருக்கிறது. அதாவது பஞ்சாப் முதல் மேற்குவங்கம் வரையிலான பகுதிகள். இங்கு வாழும் மக்களின் சராசரி ஆயுட்காலம் 7.6 ஆண்டுகள் வரை குறைந்திருக்கிறது.

டெல்லி மக்களின் ஆயுட்காலம் 10.1 ஆண்டுகளும், உத்தரப் பிரதேச மக்களின் ஆயுட்காலம் 8.9 ஆண்டுகளும், பிகார் மக்களின் ஆயுட்காலம் 7.9 ஆண்டுகளும் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டு ஊரடங்கு நேரத்தில் வாகன போக்குவரத்து குறைவாக இருந்தாலும் காற்று மாசுவினால் அதிக மாறுபாடு இல்லை. காற்று மாசுவுக்கு முக்கியக் காரணங்களாகத் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் புகை கூறப்படுகிறது. அடுத்தது வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை.

காற்று மாசு

இந்த காற்று மாசு கருவில் வளரும் சிசு தொடங்கி அனைவருக்கும் சுகாதாரக் கேடு விளைவிக்கிறது. இதே நிலை நீடித்தால் இந்தியர்களின் ஆயுட்காலம் சராசரியாக 5 ஆண்டுகள் வரை குறையும் எனத் தெரிய வந்துள்ளது," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசுவில் உலக அளவில் இந்தியா 2ம் இடத்தில் உள்ளது. அண்டை நாடான வங்க தேசம் முதலிடத்திலிருக்கிறது. உலக அளவில் மனிதர்களின் சராசரி ஆயுட்காலத்தை 2.2 ஆண்டுகள் வரைக் காற்று மாசு குறைக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?