Reliance

 

Twitter

இந்தியா

ஃபேஸ்புக்கில் பாஜகவிற்கு விளம்பரம் செய்யும் ரிலையன்ஸ் நிறுவனம் - அல் ஜசீரா சிறப்பு கட்டுரை

Govind

கடந்த ஒரு வருடமாக தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் - The Reporters’ Collective (TRC) எனும் இலாப நோக்கமற்ற இந்திய ஊடக நிறுவனமும், ஆட் வாட்ச் - ad.watch எனும் ஆய்வு நிறுவனமும் இணைந்து ஒரு ஆய்வை நடத்தி வருகின்றன. பிப்ரவரி 2019 முதல் நவம்பர் 2020 வரை ஃபேஸ்புக்கில் வெளியான 5,36,070 அரசியல் விளம்பரங்கள் குறித்து இந்த ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.

Shalabh Upadhyay

NEWJ எனும் நிறுவனம்

அதில் பாஜகவிற்கு ஆதரவாகவும், முஸ்லீம்கள் மீது வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாகவும் நிறைய விளம்பரங்கள் இருந்தன. அந்த விளம்பரங்களை NEWJ எனும் நிறுவனம் வெளியிட்டிருந்தது. இந்நிறுவனத்தின் நிறுவனர் ஷலப் உபாத்யாயா என்பவர் ரிலையன்ஸ் குழுமம் மற்றும் பாஜகவிற்கு நெருக்கமானவர். இவர் இதற்கு முன் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஊடக செயலாளராகவம், ரிலையன்ஸ் நடத்தும் நியூஸ் 18 குழுமத்தின் தலைவராகவும் செயல்பட்டிருக்கிறார். இவரது நெருங்கிய உறவினர் சதீஷ் உபாத்யாயா, தில்லியின் முன்னாள் பாஜக தலைவராக இருந்தவர்.

நியூஜே நிறுவனம் ஜனவரி 2018 இல் ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் பிரைவட் லிமிடெட் கம்பெனியாக ஆரம்பிக்கப்படுகிறது. அதே ஆண்டு நவம்பரில் ரிலையன்ஸ் குழுமத்தின் துணை நிறுவனம் இந்நிறுவனத்தின் 75% பங்குகளை வாங்கியது. மேலும் கடனீட்டு பத்திரங்கள் மூலம் நியூஜே நிறுவனத்திற்கு 8 கோடியே 40 லட்சம் ரூபாயை கடனும் கொடுத்தது.

ஃபேஸ்புக் மற்றும் யூடியூபில் செயல்படும் நியூஜே பக்கங்களின் மூலம் 2019 நிதியாண்டின் படி வருமானம் 33 இலட்ச ரூபாயாகும். நட்டம் 2 கோடியே இருபது இலட்ச ரூபாயாகும். அடுத்த ஆண்டே ரிலையன்ஸ் துணை நிறுவனம் நியுஜே நிறுவனத்திற்கு மீண்டும் கடன் பத்திரங்கள் மூலம் மேலும் 22 கோடி ரூபாயைக் கொடுத்தது. இதன் பிறகு நியூஜே நிறுவனம் ரிலையன்ஸின் ஜியோ நிறுவனக் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.

Rahul Gandhi

பாக் பயங்கரவாதியை ராகுல் காந்தி, ஜி போட்டு மரியாதையாக அழைக்கிறார்

பாஜகவிற்கு ஆதரவாக நியூஜே நிறுவனம் விளம்பரங்கள் என்ற பெயரில் பொய்ச் செய்திகளையும் வீடியோக்களையும் வெளியிடுவதற்கு ஃபேஸ்புக் அனுமதித்திருக்கிறது. தேர்தல் கமிஷனும் கண்ணை மூடிக் கொண்டிருந்தது. பொதுவில் ஃபேஸ்புக்கின் மென்பெருளே அதன் சமூக விதிகள், வழிகாட்டுதலின் படி தவறான செய்திகள், வீடியோக்களை நீக்கி விடும். ஆனால் இந்த நீக்குதல் பாஜகவிற்கு மட்டும் நடக்கவில்லை. அல்லது குறைவு. மாறாக எதிர்க்கட்சிகளின் பக்கங்கள் மட்டும் நீக்கப்பட்டிருக்கின்றன.

2019 பாராளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் மாலேகான் குண்டு வெடிப்பு பயங்கரவாதத்தில் குற்றம் சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாக்கூர் போட்டியிட்டார். இவரது இரு சக்கர வாகனத்தில்தான் குண்டு வைக்கப்பட்டு வெடித்து ஆறு முஸ்லீம் மக்கள் கொல்லப்பட்டனர். இவர் மீது இன்றும் வழக்கு நடந்து வரும் நிலையில் இவர் இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டார் என்று நியூஜே ஒரு பொய்ச்செய்தியை வீடியோவாக வெளியிட்டது. இந்த வீடியோ, ஃபேஸ்புக்கில் ஒரு நாளில் 3 இலட்சம் பார்வைகளைக் கொண்டிருந்தது. பிரக்யா சிங் தாக்கூரும் தேர்தலில் வெற்றி பெற்றார்.

இதே காலத்தில் ராகுல் காந்தி ஒரு முறை பேசும் போது பாஜக அரசாங்கம் பயங்கரவாதத்தின் மீது மென்மையாக நடந்து கொள்கிறது என்று பேசினார். அதற்கு ஆதராமாக வாஜ்பாய் காலத்தில் காந்தகார் விமான கடத்தலில் மசூத் ஆசார் எனும் பாகிஸ்தான் ஆதவரவு பயங்கரவாத அமைப்பின் தலைவர் விடுவிக்கப்பட்டதை கூறினார். பேசும் போது நையாண்டியாக ஆசாரை ஆசார்ஜி என்று கூறினார். உடனே நியூஜே நிறுவனம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பாக் பயங்கரவாதியை ராகுல் காந்தி, ஜி போட்டு மரியாதையாக அழைக்கிறார் என்று வீடியோ வெளியிட்டது. இந்த வீடியோ நான்கு நாட்களில் 6.5 இலட்சம் பார்வைகளைப் பெற்றது.

BJP

நாமும் ஒரு சர்வாதிகார நாடாகி விடுவோம்

இத்தகைய பொய்யான வீடியோக்கள் விளம்பரங்கள் என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் வெளியாவதை தேர்தல் ஆணையமும் கண்டு கொள்ளவில்லை. பாஜகவிற்கு ஆதரவாக அனுமதித்தது. இது 2019 நாடாளுமன்றத் தேர்தலோடு ஒன்பது மாநில சட்ட மன்ற தேர்தல்களிலும் வாடிக்கையானது. 2019 பாராளுமன்றத் தேர்தலில் ரிலையன்ஸ் நிதியுதவி பெற்ற இந்த நியூஜே நிறுவனம் ஃபேஸ்புக்கில் சுமார் 170 அரசியல் விளம்பரங்களைச் செய்துள்ளது. இந்த விளம்பரங்களில் மோடி மற்றும் பாஜகவை புகழ்ந்தும், எதிர்க்கட்சி தலைவர்களை இகழ்ந்தும் வீடியோக்கள் வெளியிடப்பட்டன.

ஃபேஸ்புக்கில் இந்த வீடியோக்கள் விளம்பரங்களாக காட்டப்பட்டதோடு சாதாரண மக்களும் பார்க்கும் விதத்தில் குறி வைத்து கொண்டு செல்லப்பட்டன. அதாவது அரசியல் அல்லாத செய்திகள், அரிய தகவல் செய்திகள், இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம், வைரல் வீடியோக்கள் போன்ற வகையினங்களில் ஃபேஸ்புக்கில் தேடுவோர் நியுஜே வீடியோக்களை பார்க்குமாறு விளம்பரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

இதற்கு ஆதரமாக ஃபேஸ்புக்கில் பணியாற்றிய அதன் விசில் ப்ளோயராக மாறிய பிரான்செஸ் ஹாஜென் வெளியிட்ட ஆவணங்கள் இருக்கின்றன. அதன் படி ஃபேஸ்புக் நிறுவனமானது, தேர்தல் ஆணையத்தோடு லாபி செய்து சமூக ஊடகங்களில் கடும் கட்டுப்பாடு விதிக்காதவாறு பார்த்துக் கொண்டது.

பிப்ரவரி 2019 முதல் நவம்பர் 2019 வரை நியூஜே நிறுவனம் 22 மாதங்களில் 718 விளம்பர வீடியோக்களை வெளியிட்டிருக்கின்றது. இக்காலகட்டத்தில் பத்து தேர்தல்கள் நடந்திருக்கின்றன. இந்த வீடியோக்கள் ஃபேஸ்புக் பயனர்களால் 290 மில்லியன் முறை பார்வையிடப்பட்டிருக்கின்றன. இதற்காக நியூஜே நிறுவனம் செலவழித்த விளம்பரக் கட்டணம் சுமார் 52 இலட்ச ரூபாய்.

பெரும்பாலான வீடியோக்களில் முஸ்லீம்களுக்கு எதிரான பிரச்சாரம், பாக் எதிர்ப்பு சென்டிமெண்ட், பாஜக எதிர்ப்பாளர்களை கேலி செய்தல், விமரிசிப்பவர்களை பொய்ச் செய்திகளால் மறுப்பது, மோடி அரசின் சாதனைகளைப் போற்றிப்பாடுதல் அனைத்தும் இருக்கின்றன.

இப்படித்தான் ரிலையன்ஸ் நிறுவனமும், ஃபேஸ்புக்கும் இணைந்து பாஜகவின் வெற்றிக்கு பாடுபட்டிருக்கின்றன. இனிமேல் தேர்தல் என்பது பாஜக, ஃபேஸ்புக் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் மூன்றும் இணைந்து வழங்கும் ஒரு செட்டப் நாடகம் என்பதை அல் ஜசிரா இணைய தளம் விரிவாக ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கிறது. இதற்காக இந்தியாவில் அல்ஜசீராவைத் தடைசெய்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஆனால் ஜனநாயகம் குறித்து கவலைப்படுவோர் இந்த தேர்தல் நாடகம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஊட்ட வேண்டும். இல்லையேல் நாமும் ஒரு சர்வாதிகார நாடாகி விடுவோம்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?