Jammu Kashmir : Unseasonal Snowfall In Kashmir Affects Normal Life Twitter
இந்தியா

ஜம்மு காஷ்மீர்: கோடைகாலத்தில் மிரட்டும் பனிப்பொழிவு - சுற்றுலா பயணிகள் சொல்வதென்ன?

அடுத்த 24 மணி நேரத்தில் வானிலையில் முன்னேற்றம் இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர், இருப்பினும், இன்று மாலை இடியுடன் கூடிய மின்னல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.

Priyadharshini R

கோடைக்காலத்திலும் இந்தியாவின் பல இடங்களில் பனிப்பொழிவு காணப்படுகிறது.

இமாச்சல பிரதேசம், காஷ்மீர் என பல இடங்களில் பனிப்பொழிவு ஏற்பட்டது வருகிறது.

ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் பருவமில்லாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு கோடைகாலம் குளிர்காலம் போன்று மாறியுள்ளது.

குல்மார்க், பஹல்காம், சோனாமார்க் மற்றும் காசிகுண்ட் ஆகிய இடங்களில் அதிகாலை முதலே வழக்கத்துக்கு மாறாக பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது.

ஸ்ரீநகரில் பெய்த கனமழையால் நகரமே குளிரில் தத்தளித்து வருகிறது.

ஸ்ரீநகரில் உள்ள சுற்றுலாப் பயணி ஒருவர் கூறுவதாவது

"இங்கே நேற்றிலிருந்து மழை பெய்து வருகிறது. குளிர்ந்த வானிலையால் இதமாக உணர்கிறோம். அது மட்டுமில்லாமல் சூரிய ஒளியையும் எதிர்பார்க்கிறோம். இந்த கிளைமேட்டை ரசிக்கிறோம்".

மற்றொரு சுற்றுலாப் பயணி

"நாங்கள் நேற்று இங்கு வந்தோம், நாள் முழுவதும் மழை பெய்து வருகிறது, வானிலை நன்றாக உள்ளது. நிறைய இடங்களுக்கு செல்ல திட்டமிட்டோம், ஆனால் இந்த பனிபொழிவால் இப்போதைக்கு நிறுத்திவைத்துள்ளோம்.

வானிலைக்கு ஏற்ப எங்களின் அடுத்த பயணத்தைத் திட்டமிடுவோம். இங்கு வானிலை மிகவும் குளிராக இருக்கிறது. இந்த இடத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்து வருகின்றனர். இங்கு இருப்பது பிடித்திருக்கிறது."

இந்த வானிலை பல சிக்கல்களை உருவாகியுள்ளது, சுற்றுலாப் பயணிகள், நாடோடி மக்கள் என அனைவரையும் இந்த குளிர் வாட்டி வதைகிறது.

அடுத்த 24 மணி நேரத்தில் வானிலையில் முன்னேற்றம் இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர், இருப்பினும், இன்று மாலை இடியுடன் கூடிய மின்னல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளார். வழக்கமாக இருக்கும் 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைந்து தற்போது சுமார் 12 டிகிரி செல்சியஸாக உள்ளது.

என்னதான் சுற்றுலா பயணிகள் பனிப்பொழிவை ரசித்து வந்தாலும் சீரற்ற வானிலையால் உள்ளூர்வாசிகள் சிரமப்படுகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?