மாந்திரீக கொலைகளில் முதலிடம் பிடித்த ஜார்கண்ட் மாநிலம் தற்போது மத்திய அமைச்சகம் எடுத்த ஒரு கணக்கெடுப்பில் குழந்தை திருமணத்திலும் முதலிடம் பிடித்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் 18 வயதுக்கு கீழே உள்ள பெண் குழந்தைகளுக்கு அதிக சதவீதத்தில் திருமணம் நடைபெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் நடத்திய கணக்கெடுப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
18 வயதை அடையும் முன் திருமணம் செய்து கொண்ட பெண்களின் விகிதம் தேசிய அளவில் 1.9% ஆக இருக்கிறது. இது, கேரளாவில் 0.0 முதல் ஜார்கண்டில் 5.8 ஆகவும் மாறுபடுகிறது என்று கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில் கிராமப்புற பகுதிகளில் 7.3 சதவீதமும் நகர்ப்புற பகுதிகளில் 3சதவீதமும் குழந்தை திருமணம் நடப்பதாகப் பதிவாகியுள்ளது.
இந்த கணக்கெடுப்பு 2020 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது. குழந்தை திருமணம் நடப்பதுடன் எத்தனை பேருக்கு குழந்தை இருக்கிறது என்றும் ஒரு வருடத்திற்கு எத்தனை பேர் இறக்கின்றனர் என்றும் 84 லட்சம் மக்களை வைத்துக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அறிக்கையின்படி, மேற்கு வங்காளத்தில் 54.9 சதவீத பெண் குழந்தைகள் 21 வயதை அடைவதற்கு முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள், ஜார்க்கண்டில் இது 54.6 சதவீதமாக உள்ளது, இது தேசிய சராசரியான 29.5 சதவீதத்துக்கு மிக அதிகமாக உள்ளது.
இதற்கிடையில், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) கூற்றுப்படி, ஜார்க்கண்டில் 2015 இல் 32 பேர், 2016 இல் 27 பேர், 2017 இல் 19 பேர், 2018 இல் 18 பேர், 2019 மற்றும் 2020 இல் தலா 15 பேர் மாந்திரீகக் குற்றச்சாட்டின் பேரில் கொல்லப்பட்டுள்ளனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust