சௌந்தர்யா திருமணத்தில் 

 

Twitter

இந்தியா

கர்நாடகா : முன்னாள் முதல்வர் எடியூரப்பா-வின் பேத்தி சௌந்தர்யா தூக்கிட்டு தற்கொலை

தூக்கிட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டதால் தற்கொலை என சந்தேகிக்கப்படுகிறது. "இயற்கைக்கு மாறான மரணம்" என போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Antony Ajay R


கர்நாடக மாநில முன்னாள் பாஜக முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா. மருத்துவரான இவர் பெங்களூருவில் உள்ள மவுண்ட் கார்மெல் கல்லூரியில் கணவருடன் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார். திருமணம் முடிந்து இரண்டு வருடங்களே ஆன இந்த தம்பதிக்கு 6 மாத கைக்குழந்தை உள்ளது.

இன்று காலை சௌந்தர்யாவின் உடல் வீட்டின் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டதால் தற்கொலை என சந்தேகிக்கப்படுகிறது. "இயற்கைக்கு மாறான மரணம்" என போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த செய்தி கட்சியினரையும் உறவினர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. தகவல் அறிந்தவுடன் கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்களுடன் மருத்துவமனைக்கு விரைந்து சென்று எடியூரப்பா குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?